Sunday, 26 July 2015

யாழ். இந்து சஞ்­சிகை வெளி­யீடு

யாழ். இந்து சஞ்­சிகை வெளி­யீடு

download (2)யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியின் 125 ஆவது ஆண்டு விழா நிறை­வை­யிட்டு கல்­லூரி மாணவர் முதல்வர் சபை­யினால்’The leader’ சஞ்­சி­கையும் கல்­லூ­ரியின் 125 ஆவது ஆண்டு விழா மலரும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­லூரி அதிபர் ஐ.தயா­னந்­த­ராஜா தெரி­வித்தார்.

எனவே பாட­சாலை தொடர்­பான ஆக்­கங்­க­ளை பிர­சு­ரிக்க விரும்­புவோர் அதி­ப­ரி­டமோ அல்­லது பிர­தி­ய­தி­பரும் முதல்வர் சபை பொறுப்பாசி­ரி­ய­ரு­மான சதா நிம­ல­னி­டமோ அல்­லதுprincipal@jhc.lk அல்­லது jhcprefects@gmail.com எனும் மின்­னஞ்சல் முக­வ­ரி­க­ளுக்கோ எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Friday, 17 July 2015

இசை அர்ப்பணம் -செல்வி.ரஞ்சனி வைரவன்

    ஐ.இ.பழைய மாணவர் ஒன்றிய காப்பாளர் திரு.த.உலகநாதன் அவர்களின் அனுசரணையுடன் பல்கலைக் கழக கற்கையை மேற்கொண்ட விக்டோரியா கல்லூரி பழைய மாணவி  செல்வி ரஞ்சனி வைரவன் அவர்களின் இசை அர்பண நிகழ்வு திரு.அ.சதானந்தவேல் அவர்களின் அனுசரணையில் 19 - 7 - 2015 
ஞாயிறு விக்டோரியா கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது.