Showing posts with label Cultural. Show all posts
Showing posts with label Cultural. Show all posts

Friday, 23 August 2013

Excellent dance performance by Victoria College Students

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 16-08-2013 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது. இதன் போது நிகழ்ந்த விக்டோரியா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை விக்டோரியக் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி,
முன்னால் சங்கீத ஆசிரியை பங்கயச்செல்வி ஆகியோர் சிறப்பாக மேடை ஏற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், Video உதவி புரிந்த கோணாத் அனைவருக்கும் U-K பழைய மாணவர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறது.


See Photos


Photograph by Kiruththiga Keerthi
   
Video Konath

Sunday, 12 May 2013

: Provincial Level Tamil Day Competition - Dance Drama 2nd Place


வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவிகள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர். இப்போட்டிகள் இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றன.
See Photos

Thursday, 18 April 2013

நாட்டிய நாடகம் - விக்டோரியாக் கல்லூரி முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தினப் போட்டிகளில் நாட்டியநாடகம் நிகழ்ச்சியில் யா/விக்டோரியாக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டிலும் இக் கல்லூரி மாணவர்களே இந் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

See Photos

ஆதிவாசிகள் - குழு நடனம் - 03ஆம் இடம்

யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ்மொழித் தினப் போட்டிகளின் போது ஆதிவாசிகளின் குழு நடனம் நிகழ்ச்சியில் யா/விக்ரோறியாக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

See Photo

Saturday, 16 March 2013

All Island School Dancing Competition - 2012

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட நடனப்போட்டிகள் இன்று மட்டக்களப்பு மகாஜனா வித்தியாலயத்தில் இடம்பெற்றன. வடக்கு மாகாணத்திலிருந்து எமது கல்லூரியின் மூன்று நிகழ்ச்சிகள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தன. தேசிய மட்டப் போட்டிகளில் பின்வரும் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

தாளநடனம் - ஆண்கள்                         01ம் இடம்
ஜதீஸ்வரம் - பெண்கள்                          02ம் இடம்
தனிநடனம் - செல்வி.இ.தேவிகா     02ம் இடம்

இவ் வெற்றிகள் கல்லூரியின் கலைத்துறை சார்ந்த சிறந்த பெறுபேறுகளாக கருதப்படுகின்றது. இதனை பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிச் சமூகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

Wednesday, 13 March 2013

All Island Dance Competition‏

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நடனப் போட்டிகள் மட்டக்களப்பு மகாஜனா வித்தியாலயத்தில் 16.03.2013ம் திகதி நடைபெறவுள்ளது. வடமாகாணத்தில் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து இப்போட்டிகளுக்காக ஐந்து நிகழ்ச்சிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் மூன்று நிகழ்ச்சிகள் எங்கள் கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டமை குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆண்பிள்ளைகள் பங்குகொள்ளும் தாளம் நடன நிகழ்ச்சி, பெண்பிள்ளைகள் பங்குபற்றும் ஜதீஸ்வரம் நடன நிகழ்வு, தனிநடன நிகழ்ச்சி என்பன இவையாகும். இப்போட்டிகளுக்கான பயிற்சிகளில் மாணவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 15.03.2013 ம் திகதி காலை மட்டக்களப்புக்கு செல்லவுள்ளனர்.

Friday, 15 February 2013

Electronic Invitation - Sports meet & Interval performance program

The School Community invites you to our Annual Inter-house Athletic Meet 2013 and spectacular sports meet interval performance.  For the very first time ever in our school history, 250 students are simultaneously taking part in the interval performance program.  Come and see our talented students and what they are capable of both on the track participating in the sports meet and performing during the interval under the guidance of our equally talented teachers and co-ordinators. 

Sunday, 9 December 2012

நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு

சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்கத்திறன் விருத்தி நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
புத்தாக்க அரசாங்க இயக்கத்தினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வின் வளவாளர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கப் பணியாளரும் ,யாழ்ப்பாண மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .குமரன் அவர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் ,மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .அருள்குமரன் ஆற்றுகையாளர் எஸ் .லோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சிப் பட்டறையை திறம்பட வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சிப் பட்டறையில் நாடகத்தயாரிப்பு படிமுறை ,அரங்கத்திறன்விருத்தி ஆளுமை வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .இப்பயிர்ச்சிப் பட்டறையில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிர்ச்சிப் பட்டறை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில் அமைந்ததுடன் புதிய அனுபவங்களையும் அரங்கியல்சார் நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்கள் .

Friday, 16 November 2012

நடன நிகழ்வு‏ - ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி

வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளிலான என்ற கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் விருந்தினர்களை வரவேற்பதற்கான வரவேற்பு நடன நிகழ்வொன்றை நடாத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளனர். கலந்து கொண்ட மாணவர்களின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

See Photos

Tuesday, 23 October 2012

Navaraathri Performance

Photographs of superb performance for Navaaraththri given by our students in the parliament building to an audience of approximately 1500 on Tuesday 23rd October 2012

See Photos

Friday, 6 July 2012

முத்தமிழ் விழா - 2012‏

இயல், இசை, நாடகம், ஆகியமுத்தமிழும் கமழ முத்தமிழ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது . சுழலும் சொற்போர்,கர்நாடக இசை,பரதநாட்டியம் ,மயில்நடனம் ,நாடகம் ஆகியநிகழ்ச்சிகள் நடைபெற்றன .

Friday, 1 June 2012

New aesthetic building opening ceremony

எமது கல்லூரி ”இசுறு பாடசாலை” என்ற செயற்றிட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு புதிய 130*25 அளவில் கீழ்தளத்தில் சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம் என்பவற்றிற்கான கூடமும் மேல்தளத்தில் மண்டபமும் உள்ளடக்கியதாக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்களதும் மாணவர்களதும் பாவனைக்கு விடுவதற்கான சம்பிரதாய நிகழ்வு இன்று இடம் பெற்றது. அது தொடர்பான சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

Tuesday, 29 May 2012

வெற்றி வாகை

அகில இலங்கை ரீதியில் தமிழ்த் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடாத்தப்பட்ட விசேட கூத்து ,நாட்டிய நாடகம் போன்ற எமது பாரம்பரிய கலை நிகழ்வுகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டத்தில் முறையே முதலாம் ,இரண்டாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் .இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் ,அத்துடன் அங்கு செல்வதற்கு தேவையான செலவைப் பொறுப்பேற்ற இலண்டனைச் சேர்ந்த சி .முகுந்தன் அவர்களுக்கும் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றியையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது .
29/05/2012

Monday, 28 May 2012

வடமாகாண தமிழ்மொழித்தின விழா

எமது கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை தமிழ்த்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேடகூத்து, நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மாகாண மட்டத்தில் முறையே முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

வடமாகாண தமிழ்மொழித்தின விழா நேற்று வவுனியாவில் நடைபெற்ற போது இம்மாணவர்கள் பதக்கம் சூட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
 

Sunday, 13 May 2012

மாகாண மட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட நாட்டுக் கூத்து நிகழ்வில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. சென்றாண்டிலும் எமது கல்லூரியே முதலிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். படத்தில் நாட்டுக் கூத்தில் நடித்த மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுடன் காணப்படுகின்றனர்.
 
 

Friday, 11 May 2012

London based S.Mukunthan Donated 25,000 rupees for traveling expenses

 இலண்டனில் வசித்துவரும் எமது விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .முகுந்தன் அவர்கள் யுகே பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட எமது கல்லூரியின் மாணவர்கள் நாட்டிய நாடகத்தில் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்று மாகாணரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக வவுனியா செல்ல வுள்ளதற்கான செலவினைப் பொறுப்பேற்றுள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Read More

Saturday, 5 May 2012

நாட்டிய நாடகம்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில்

Read More

Thursday, 3 May 2012

Volley Ball & Naatukkoothu

Our boys volley ball team got the second place in the district level.
our "naattukkooththu" got 1st place in the district level and going to
participate in the provincial level.

Saturday, 28 April 2012

Dance & Drama team got first place in district level


 
Victoria college Dance & Drama team got first place in District level today (28/04/2012). Vembadi, Hindu ladies and other schools lost. Our school is going to represent the Jaffna District, in future competitions with other districts.

Bus fare is 4000/= today, next competition may be in some other district. So, the transport cost may be 15-20,000/=.   
Latest Update -Regarding the the transport cost to the dance drama, we had to pay extra 1000/= in addition to the 4000/= as a waiting charge.