இலங்கையின் பிரதம மந்திரி கெளரவ திரு.ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து விக்ரோறியாக் கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவி செல்வி மதுஹரி சத்தியலோகநாதன் விஷேட திறமைகளை வெளிப்படுத்தியமைக்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.கல்வி அமைச்சின் சுபஹ புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தில் விஷேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றில் வழங்கப்பட்டுள்ளது.எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவைப்படும் படைப்பாற்றலுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.புதிய கண்டுபிடிப்பு,அழகியல்,விளையாட்டுத்துறைகளில் விஷேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இக்கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.மதுஹரிக்கு அழகியற் பிரிவில் விஷேட திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக இவ்வுயரிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுஹரிக்கு விக்ரோறியா இராச்சியத்தின் பெருமிதம் பொங்கும் வாழ்த்துக்கள்.ALWAYS FEEL HIGH,
WE ARE VICTORIANS.
WE ARE VICTORIANS.