Saturday, 30 June 2012

பண்ணாகம் ஒன்றியம் (ஐ.இ) - 2012 வருடாந்த ஒன்றுகூடல்

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், இராப் போசனமும்

எதிர்வரும் 14.07.2012ல் BLACKWELL HALL,
90, UXBRIDGE ROAD,HARROW, MIDDLESEX, HA3 6DQ. என்னும் முகவரியில் ஒன்றியத் தலைவர் திருமதி தணிகாசலம் தலைமையில் நடைபெறவுள்ளது.அன்றையதினம் புதுவருட உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெறவுள்ளதால்,அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புக்கரம் நீட்ட அழைக்கின்றோம்.
கலைநிகழ்ச்சிகளில் உங்கள் சிறார்களும் பங்குகொள்ள விரும்பினால் ஒன்றியச் செயலர் திருமதி ஜெயதாசனுடன் 02082418439 என்ற தொ.பே.இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரம்:- மாலை 6.00 மணி

ஒன்றுகூடல் விழா நடை பெறும் மண்டபம்

முகவரி:

BLACKWELL HALL,
90, UXBRIDGE ROAD,HARROW, MIDDLESEX, HA3 6DQ.

அனைவரும் வருக, ஆதரவு தருக. உங்கள் ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றி.
தொடர்புகளுக்கு:02082418439

Friday, 29 June 2012

DSI கரப்பந்தாட்டப் போட்டிகளில் விக்ரோறியா சம்பியன்

DSI நிறுவனம் யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டிகளில் 16 வயது ஆண்கள் பிரிவில் யா/விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மூன்று சுற்றுக்களைக் கொண்ட இறுதிப் போட்டியில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துடன் மோதிய விக்ரோறியா அணியினர் முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று சம்பியன் கேடயத்தைப் பெற்றுக் கொண்டனர்.

Thursday, 28 June 2012

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளித்த விருந்து

மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற நாட்டிய நாடகம், விசேட கூத்து, எல்லே, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் என்பவற்றில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளித்த விருந்துபசாரத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள்
See Photos

Saturday, 23 June 2012

Photo copier request for Ikkiyasanga Saiva Viththiyaasaalai

The request was immediately accepted by Ms S. Thenmozhi. We appreciate her for coming forward to sponsor the whole amount, LKR 115 000, through JVC, OSA, UK.
Read More

Friday, 22 June 2012

OSA-UK focusing on feeding schools

OSA – UK’s eyes have turned towards the feeding schools. Our representatives had a meeting with Ikkiyasanga Saiva Viththiyaasaalai, and identified their needs. We, kindly request the other foreign OSA’s to join with us, and stand with us shoulder to shoulder to support and develop these feeding schools.
 

Thursday, 21 June 2012

Appreciation by local News paper Uthayan for our Elle players

எல்லே, கரப்பந்தாட்ட அணிகள் மாகாணத்தில் பெற்ற வெற்றிகளுக்காக கல்லூரியில் கௌரவம் பெறுகின்றார்கள்.

Monday, 18 June 2012

தொடர்ந்து 3வது வருட வெற்றி(Hat-trick Champions)

எமது கல்லூரியின் 19 வயது பெண்கள் துடுப்பாட்ட அணி இம்முறையும் வடமாகாணச் சம்பியன் வெற்றிக் கேடயத்தை வென்றுள்ளது. தொடர்ந்து 3வது வருட வெற்றி(Hat-trick Champions) கல்லூரிக்குப் பெருமிதம் கொடுத்துள்ளது. செல்வி.மா.கோபிகா தலைமையிலான விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

Kind request to come forward and support all sports at Victoria College

Read More

Our Elle Team is going to represent the Northern Province in the National Competition

விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் அணி மாகாணமட்டத்தில் நடைபெற்ற எல்லே போட்டிகளில் வடமாகாணத்தின் முன்னணிக் கல்லூரிகளை வென்று முதலிடத்தை பெற்று மாகாண சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டியில் அணிகளின் அறிமுகம், வெற்றிக் களிப்பில், அணித்தலைவியும் அதிபரும் வெற்றிக்கேடயம் பெறும் போது, பிரதம விருந்தினர், அதிபர், கல்வி அதிகாரிகளுடன் அணி வீராங்கனைகள், அதிபருடன் வெற்றி மகிழ்வைப் பகிர்தல் என்பவற்றை படங்களில் காணலாம்.
இவ்வணியினரே சென்ற ஆண்டின் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sunday, 17 June 2012

Under15 Team won the Runner Up in Provincial Level Volley Ball Competition

Our Under15 Team won the Runner Up in Provincial Level Volley Ball Competition. They have been selected to Participate in National Level Competition.
See Photos

Friday, 15 June 2012

பறாளாய் ஸ்ரீ ஈஸ்வர விநாயகர் திருக்கோவில்

* கொடியேற்றம் (15.06.12)
* தேர்த்திருவிழா (25.06.12)
* தீர்த்தத்திருவிழா (26.06.12)
Read More

Tuesday, 12 June 2012

Peoples Bank's Compliments

மக்கள் வங்கி சங்கானைக்கிளையினர் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் அதிகளவிலான சேமிப்பு வைப்புகளை தமது வங்கியில் வைப்பிலிட்டதை பாராட்டியும் ஊக்குவித்தும் அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள். அத்துடன் கல்லூரிக்கு 50.000/- பணத்தினை நன்கொடையாகக் கொடுத்தார்கள். படங்களில் மக்கள் வங்கியின் முகாமையாளர் கல்லூரி அதிபரிடம் நன்கொடையை வழங்குவதையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்குவதையும் காணலாம்.
Read More

World Vision Organisation donated 15 Bicycles

எமது கல்லூரியில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள கல்வி ஆர்வமுள்ள 15மாணவர்களுக்கு World vision என்னும் அரசசார்பற்ற நிறுவனத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இம்மாணவர்கள் தமது பாடசாலைப் படிப்பு நிறைவுற்றதும் தம் நிலையிலுள்ள மாணவர்களுக்கு இத்துவிச்சக்கரவண்டிகளை கையளிப்பார்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தனது பொறுப்பில் இத்துவிச்சக்கரவண்டிகளை ஏற்று மாணவர்களுக்கு கையளித்தது. பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.பா.விஜயகுமார் அவர்களும் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் மாணவர்களின் பெற்றோரிடம் இவற்றினை வழங்குவதைப் படங்களில் காணலாம்.

Under 15 Cricket Team

மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டப்போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்ட விக்ரோறியாக் கல்லூரியின் துடுப்பாட்ட அணியினர் நேற்றைய தினம் கல்லூரியில் கௌரவிக்கப்பட்டனர். அதிபர், ஆசிரியர்களுடன் அணி வீராங்கனைகளை படத்தில் காணலாம்.

Sunday, 10 June 2012

Greetings to Bharathy Kalai Mantram - OSA (UK)

OSA (UK) sent official greetings to Bharathy Kalai Mantram yesterday to appreciate their services. The event president read out the letter during his speech
Read More

Saturday, 9 June 2012

Bharathy Kalai Mantram 30th Anniversary Celebration

Bharathy Kalai Mantram 30th anniversary celebration started today. This is a 2-day event finishing tomorrow.
See Photos

Thursday, 7 June 2012

Bharathy Kalai Mantram 30th anniversary Invitation

Read More

பிரித்தானிய மகாராணியாரின் அறுபதாவது முடிசூட்டு விழாவின் ஒன்றுகூடல்

நிகழ்விற்கு மேஜர் அவர்கள் தமது பாரியாருடன் வந்து சிறப்பிக்க உள்ளார் .இன் நிகழ்விற்கு எமது பழைய மாணவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பித்துத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

ஆரம்ப பாடசாலைக்கான புதிய முயற்சி



எமது ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் ஐக்கியசங்க சைவ வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை சிறந்த தேர்ச்சியுள்ள  மாணவர்களாகஆக்குவதற்கும் வித்தியாசாலையை அபிவிருத்தி அடைய செய்வதற்கும் ,முயற்ச்சிகள் எடுக்கப்பட உள்ளன .ஏனெனில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் சராசரி 50% ஆனா மாணவர்கள் ஆரம்பப் பாடசாலையான  ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் இருந்தே கல்வி கற்பதற்காக  வருகின்றார்கள் .இந்த அடிப்படையில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் ஆரம்பப்பாடசாலையான  ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையை சிறந்த தரமான நிலைக்குக் கொண்டு வருவதற்காக  தற்ப்போது முயற்ச்சிகள் எடுத்து வருகிறார்கள் .
 இவர்களில் இந்த  முயற்ச்சிக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்கள் .இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக திரு . சி .ரவிசங்கர் அவர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முதல் கட்ட உதவியை செய்ய  முன்வந்துள்ளார் .மேலும் பழைய மாணவர்கள் எல்லோரும் இந்தப் புதிய  திட்டத்திற்கு தங்களாலான  உதவியை செய்ய  முன் வரவேண்டும் என்பதே
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் எதிர்பார்ப்பாகும்

Monday, 4 June 2012

Paralai Murugan

At Paralai Murugan Temple ,Chulipuram, Jaffna photos of Lord Murugan were taken today Sunday 03/06/2012 being Cart festivel Day -Swami -Takern round on the chariot-"Ther ".
After going round the temple on his Special Chariot on this special day with devotees drawing the chariot and hundreds of devotees praying and singing, the Chariot comes to its destination- "Ther Muddi ". 

Sunday, 3 June 2012

பாராட்டப்பட வேண்டிய பண்பானவர்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் முதல் மாணவனும் ,பழைய மாணவர் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தின் செயலாளரும் ஆகிய DR.செ.கண்ணதாசன் அவர்கள் தனது மருத்துவத் தொழினுடன் ,மேற்படிப்புக்களையும் கவனித்துக் கொண்டு எமது கல்லூரியின் அபிவிருத்திக்காக கனடா ,அவுஸ்திரேலியா ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து இரவு ,பகல் பாராது அயராது உழைத்த மேன்மகன் இவராவார் .இவர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் செயலாளராக பதவி ஏற்க முன்னரே கல்லூரியின் அபிவிருத்திக்காக செயல்பட்டார் .

Saturday, 2 June 2012

Under 15 Cricket team won against Jaffna College.

விக்ரோறியாக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக்கல்லூரிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டியில் விக்ரோறியாக்கல்லூரி அணி 8 இலக்குகளால் இலகுவாக வெற்றி பெற்றது.
15வயதுப் பிரிவிற்குட்பட்டவர்களுக்கான இப்போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கியது. 65 ஓட்டங்களுக்கு சகல வீரர்களும் ஆட்டம் இழந்தனர். விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன்.சி.பிரசாந் 6 இலக்குகளைக் கைப்பற்றினார். 66 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 2 வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் 66 ஓட்டங்களைப் பெற்று 8 இலக்குகளால் வெற்றி பெற்றது.

OSA (UK) congratulates our players and once again saying thanks to the people who donate money for their development.

Friday, 1 June 2012

New aesthetic building opening ceremony

எமது கல்லூரி ”இசுறு பாடசாலை” என்ற செயற்றிட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு புதிய 130*25 அளவில் கீழ்தளத்தில் சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம் என்பவற்றிற்கான கூடமும் மேல்தளத்தில் மண்டபமும் உள்ளடக்கியதாக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்களதும் மாணவர்களதும் பாவனைக்கு விடுவதற்கான சம்பிரதாய நிகழ்வு இன்று இடம் பெற்றது. அது தொடர்பான சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன