Wednesday, 13 February 2013

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

2013 ஆம் ஆண்டிற்கான சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்
போட்டி எதிர்வரும் 16.02.2013 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது .இந்த இல்ல விளையாட்டுப்போட்டி எமது கல்லூரியின் அதிபர் வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது .

பிரதம விருந்தினராக பிரதேசக்கல்வி அதிகாரி திரு .ச .சந்திரராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.இப்போட்டிகளில் நான்கு இல்லங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடும் போட்டிகளின் மத்தியில் மைதானத்தில் போட்டிகளில் பங்குபற்ற உள்ளார்கள் . 

இப்போட்டிகளை மேலும் சிறப்பிக்கும் நோக்கமாக எமது கல்லூரியின் 250 மாணவர்களைக் கொண்ட நடனக்கலை நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறவுள்ளது .இந் நடனக்கலை நிகழ்ச்சிகள் கல்லூரியின் ஆசிரியர்கள் தமது சிரமத்தைப் பாராது மாணவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து கலையை வெளிப்படுத்தவுள்ளார்கள். 

இவ்வரும் நடன நிகழ்ச்சி முதன் முறையாக குடாநாட்டில் நடைபெற உள்ளது.இதைப் பார்த்து மகிழ்வதற்காக வலிகாமம் மக்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.நிகழ்ச்சிக்கு புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒன்றியங்கள் அனுசரணை வழங்க முன்வந்துள்ளனர்.எமது யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தங்கள் அனுசரணையை வழங்க உள்ளது.எமது கல்லூரி மாணவர்களின் கல்விக்கும்,விளையாட்டிற்கும்,கலைப்பாடங்களிற்கும் தகுந்த வளர்ச்சிக்கும் எமது ஒன்றியம் தொடர்ந்தும் தமது ஆதரவை நல்கும்.

மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொன்கின்றது. 

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See 250 of our students getting ready for the interval program.