காங்கேசன்துறை மாவட்டச் சாரணர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட
பேடன்பவல் நினைவுதின நிகழ்வுகள் எமது கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் மாவட்ட
ஆணையாளர் திரு.ந.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றன.
சங்கானை கல்விக் கோட்டப் பணிப்பாளர் செல்வி.அ.சா.மரியாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் எமது கல்லூரி அதிபர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளை காங்கேசன்துறை மாவட்ட உதவி ஆணையாளரும் எமது கல்லூரி சாரண ஆசிரியருமான திரு.செ.சிவகுமாரன் ஒழுங்கமைத்திருந்தார்.

எமது
கல்லூரி அதிபர் தனது சிறப்பு விருந்தினர் உரையில், விக்ரோறியாக்
கல்லூரியின் சாரணர் இயக்கம் மிகவும் பழைமை வாய்ந்தது எனவும் இங்கு தலைமை
தாங்கும் திரு.இரவீந்திரன்
அவர்களும் மாவட்ட உதவி ஆணையாளரும் கல்லூரியின் உபஅதிபருமான
திரு.சிவகுமாரன் அவர்களும் கல்லூரியின் பழைய மாணவர்கள், இங்கு கற்ற
காலத்தில் சாரண இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் எனவும்
1980களில் திரு.குணரட்ணம் ஆசிரியர் அவர்கள் சாரணருக்குப் பொறுப்பாயிருந்த காலத்தில் எமது கல்லூரியில் கல்வி கற்ற திரு.சி.சீனிவாசகம் முதலாவது ஜனாதிபதி சாரணராக விருது பெற்ற பெருமைக்குரியவர் என்பதை நினைவுகூர்ந்ததுடன் திரு.சீனிவாசகம் கல்லூரியின் சாரணர்களின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் சாரண இயக்கம் இங்கு சிறப்பாக செயற்பட்டதையும் கூறி அந்நிலையை மீண்டும் கட்டியெழுப்ப தற்போது அடித்தளமிடப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

பிரதம
விருந்தினர் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட பலரும் உரையாற்றினர்.
பேடன் பவல்
தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு
பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சாரணர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.