Saturday, 13 April 2013

பாரதி முன்பள்ளிக்கு புதிய கட்டடம்

சுழிபுரம் மேற்கு பாரதி கலைமன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் பாரதி முன்பள்ளி 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .இந்த முன்பள்ளி பல சிரமங்களுக்கு மத்தியில் சுழிபுரம் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் தற்காலிகமாக நடாத்தப்பட்டு வருகின்றது .இதில் 60 திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பக்கல்வியை கற்று வருகின்றார்கள் .
இந்த முன்பள்ளிக்கு ஒரு நிரந்தரக் கட்டடம் தேவை என்பது சுழிபுரம் கிராம மக்களுக்கு ஒரு நீண்ட கால எதிர்பார்ப்பாகும் .இவ் எதிர்பார்ப்பினை பாரதி கலைமன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் ,கல்வி அபிவிருத்தி குழு (EDC) அமைப்பு உறுப்பினர்களும் ,சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உருப்பினர்களும் ஒன்று கலந்து உரையாடல் ஒன்றை நடாத்தினார்கள் .இக் கலந்துரையாடலின் பின் திரு .சிவசுப்பிரமணியம் .ரவிசங்கர் அவர்கள் பாரதி முன்பள்ளிக்கு ஒரு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு இருபது இலட்சம் ரூபாவை முதற்க் கட்ட நன்கொடையாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.
1500 சதுர அடி பரப்பளவை கொண்ட இக்கட்டடத்தின் அடிக்கல் நாட்டும் விழா 11.04.2013 அன்று சுழிபுரம் பாரதி முன்பள்ளி தலைவர் திரு இரவீந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதற்க்கான வேலைத்திட்டத்தை EDC அமைப்பினர் பொறுப்பெடுத்து செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
"இளஞ்சிறார் வளர்ச்சிக்கு இடமளிப்போம்"
 யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos 

See Slideshow