138 ஆண்டுகள்
பழமை வாய்ந்த எமது கல்லூரி
மாபெரும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆங்கிலேயர்
காலத்தில் அவர்களது மகாராணியின் பெயரைத் தாங்கி எமது
நிறுவுனர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஏழைச் சைவமாணவர்களது
அறிவுக் கண்களைத் திறந்து வைத்தது.
பல்வேறு
திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க அதிபர்களின் வழிகாட்டலில்
பல்வேறு சாதனைகள் படைத்துவருவது எமது பாடசாலை.
இத்தகைய
வரலாற்றுப் பதிவுகள் பலரது பார்வையில் நூல்
வடிவில் 125ஆவது மற்றும் 135ஆவது
ஆண்டுமலர்களாக வெளியிடப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
125ஆவது ஆண்டுமலர்
, 135ஆவது ஆண்டுமலர் மற்றும் கடந்த
10 வருட பரிசளிப்பு விழா மலர்கள், உலகெங்கும் பரந்துவாழும்
எமது பழைய மாணவர்களுக்குக் கிடைக்க
வேண்டும் என்பதோடு காலாகாலமாகப் பாதுகாத்து வைக்கப்படவேண்டும் என்ற எமது வாழ்நாள் அதிபர் திரு வ
ஸ்ரீகாந்தனின் வேண்டுகோளின்படி எமது யூ+ கே பழைய மாணவர்
ஒன்றியம் அதனை இலத்திரனியல் புத்தகமாக
மாற்றி இணையத்தளத்தில் உலவ விட்டுள்ளது.
இந்த வேலை திட்டத்தில்
எமது நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர்
அவர்களுடன்
சேர்ந்து உழைத்த Dr S கண்ணதாசன் திரு து இரவீந்திரன் மற்றும் சியாமளன் கண்ணதாசன் மற்றும் இந்த வேலைத்திடட்தினை ஆக்கமும்
ஊக்கமும் கொடுத்து வழி நடத்திய எமது வாழ்நாள் அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்கள்
பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவராவார்.
சிறப்பு மலர்கள்
Prizeday Reports (Last 10 Years)