Thursday, 7 August 2014

Founder's heirs visit to our school‏

எமது கல்லூரியின் நிறுவுனர் வழித்தோன்றல்களான திருமதி.சந்திரா சாம்பசிவம், திரு.சா.ஸ்கந்தகுமார் குடும்பம் சென்ற தவணை நிறைவு நாளில் கல்லூரிக்கு வருகை தந்தனர். தமது பேரனார் மனேஜர் செல்லப்பா அவர்களின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய இவர்கள் கல்லூரியைச் சுற்றிப் பார்வையிட்டனர். 

தாம் சில வருடங்களுக்கு முன் வருகை தந்நத போது இருந்ததை விட கல்லூரி மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்திருப்பதையும் பௌதிக வளங்கள் அதிகரித்திருப்பதையும் 400m ஓடுபாதை கொண்ட மைதானம், புதிய கட்டிடங்கள் போன்றவற்றையும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். தமது மூதாதையர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று பெருமளவு அபிவிருத்தி கண்டிருப்பதை மனதாரப் பாராட்டினார்கள். 

புதிய தேநீர்ச்சாலை அமைப்பதற்காக நிறுவுனர் வழித்தோன்றல்கள் பத்து லட்சம் ரூபாவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேநீர்ச் சாலையையும் பார்வையிட்டு திருப்திப்பட்டனர்.

Ilaruban who is living in UK visited to our school