பூநகரி கல்விச் கோட்டத்திற்குட்பட்ட கிளி/வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பக்கோரியும் க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவை ஆரம்பிக்குமாறு கோரியும் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் இணைந்து பாடசாலைக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்றுக்காலை 8 மணியிலிருந்து பி.ப. 2 மணி வரை மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னெடுத்தனர்.
கணிதம், வரலாறு, சுகாதாரம், வர்த்தகம் ஆகிய முக்கிய பாடங்களுடன் ஏனைய பாடங்களிற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகக் அவர்கள் கூறினர்.
அத்துடன் ஆரம்பப்பிரிவு, இடைநிலைப்பிரிவு ஆகியவற்றில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளதாகவும் இதனால் தமது கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறித்த பிரச்சினைக்குரிய தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் முன் வரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோசம் எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.