எங்கள் கல்லூரியிலிருந்து 2014ம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற நால்வருக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வு "றிஜ்வே" மண்டபத்தில் இன்று காலை நடை பெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியர் திருமதி.அல்லிராணி செல்வநாதன், லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் காப்பாளருமான திரு.உலகநாதன், கனடா பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு.பாலச்சந்திரன், வடமாகாண கல்வித்திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர் 'விக்ரோறியன்' திரு.கைலாசநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உயர்சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்நிருந்தனர்.
பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவியான செல்வி.இ.கார்த்திகா அவர்களுக்கு முன்னாள் ஆசிரியை திருமதி.செ.அல்லிராணி அவர்களும் கலைப்பிரிவில் உயர்சித்தி பெற்ற மாணவர்களான செல்விகள் அனோஜிதா, சிவகங்கா, கஜலக்சி ஆகியோருக்கு முறையே திருவாளர்கள் உலகநாதன், பாலச்சந்திரன்,கைலாசநாதன் ஆகியோர் மடிக்கணனிகளை வழங்கினார்கள். மற்றும் இந்நிகழ்வில் பல்கலை கழகம் செல்லும்
மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி ஊக்கிவிக்க வேண்டும் என்ற நற்பணியை ஆரம்பித்த எமது கல்லுரி பழைய மாணவனும் முன்னாள் அதிபருமான திரு ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .
மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி ஊக்கிவிக்க வேண்டும் என்ற நற்பணியை ஆரம்பித்த எமது கல்லுரி பழைய மாணவனும் முன்னாள் அதிபருமான திரு ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .
மாகாணக்கல்வித்திணைக்களத்திலிருந்து எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு வந்திருந்த கல்வி
அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் கலாநிதி.செ.கண்ணதாசன், உறுப்பினர் திரு.து.ரவீந்திரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கு
கொண்டு சிறப்பித்தார்கள். மாணவர்கள் சார்பில் செல்வி.அனோஜிதாவும் கல்லூரி சார்பில் பிரதி அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களும் நன்றியுரை வழங்கினார்கள். இந்நான்கு மடிக்கணனிகளும் அவுஸ்திரேலியா(மெல்போன்) பழைய மாணவர சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டதோடு இவர்கள் வருடாந்தம் இவ்வெகுமதிகளை மாணவர்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.