யாழ். சுழிபுரம் பாரதி கலைமண்றத்தின் 33வது ஆண்டு விழா நேற்று (24.05.2015) சுப்பையா அரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் அவர்களும் சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியேகஸ்தர் திருமதி.நிருபா காசிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக
சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் திரு.சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு.வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வின் ஆசியுரையினை சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு
பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமண்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை
உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் லண்டன் வாழ் தழிழ் உறவான சுழிபுரத்தைச் சேர்ந்த திரு. ரவிசங்கர் அவர்களால் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு நிரந்தர கட்டடம் அமைக்கவென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு ரூபா.100,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் பாரதி கலை மன்றத்தின் கட்டட நிதிக்காக திரு ரவிசங்கர் அவர்களினால் வழங்கப்பட்டது ரூபா.100000.00 க்கான காசோலையும் கலைமன்றத்தின் தலைவர் திரு த. விமல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த 33வது ஆண்டு நிறைவு நிகழ்வு கிராம மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.