Tuesday, 12 September 2017

துயர் பகிர்வு - அப்புத்துரை நிர்மலாதேவி [ மலர் அக்கா]

                               
எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மலர் அக்காவின் திடீர் மறைவு எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. சுழிபுரம் சமூகத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் இன்முகத்துடன் கலந்து கொண்டு எம்மை மகிழ்விப்பது அனைவரின் மனதிலும் ஆழமான நினைவலைகளை தோற்றுவிக்கின்றது. பல்வேறு சமயப் பணிகளையும் சமூகப் பணிகளையும் கல்விப் பணிகளையும்  ஆற்றிவரும் குடும்பத்தில் ஒருவராக இருந்து ஒத்துளைத்தமை என்றும் நினைவிற்கொள்ளத்தக்கது.அன்னாரின் ஆன்மா இறை கழல்களில் அடைந்து சாந்திபெற பிரார்த்திப்போமாக......