Monday, 13 April 2015

Easter Sunday in Bharathi children care centre

சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மானவர்கள் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரிப்பதுடன், உலகம்
பூராவும் பரந்து வாழ்ந்து கல்லூரி அன்னைக்கு புகழ் தேடிக் கொடுக்கின்றனர்.
இவர்கள் யாவருமே ஆங்கில அறிவில் சிறந்து விழங்கக் காரணமானவர்களில் ஒருவர் செல்லத்துரை டீச்சர். 
அண்மையில் அவரது மறைவு எம்மை ஆழ்ந்த  துயரத்தில் ஆழ்த்தியது.
அவரை மறவாத மெல்போன் வாழ் மாணவர்கள் அவர் நினைவாக அனாதைச் சிறுவர்களுக்கு உணவளித்து, தமது குரு விசுவாசதை புலப்படுத்தியமை நெக்குருக வைத்தது.

See Photos


கவனயீர்ப்பு போராட்டம்


பூநகரி கல்விச் கோட்டத்திற்குட்பட்ட கிளி/வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பக்கோரியும் க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவை ஆரம்பிக்குமாறு கோரியும் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் இணைந்து பாடசாலைக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்றுக்காலை 8 மணியிலிருந்து பி.ப. 2 மணி வரை மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னெடுத்தனர்.
கணிதம், வரலாறு, சுகாதாரம், வர்த்தகம் ஆகிய முக்கிய பாடங்களுடன் ஏனைய பாடங்களிற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகக் அவர்கள் கூறினர்.
அத்துடன் ஆரம்பப்பிரிவு, இடைநிலைப்பிரிவு ஆகியவற்றில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளதாகவும் இதனால் தமது கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறித்த பிரச்சினைக்குரிய தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் முன் வரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோசம் எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். 

O/L Results 2015


Saturday, 21 March 2015

" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு - 21 March

    " சுப்பையா உடையார்"  ஞாபகார்த்த திறந்த வெளி அரங்க நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன . நேற்றைய தினம் அத்திவாரத்திற்கான அடித்தள concrete போடப்பட்டு அத்திவாரக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன 


Tuesday, 17 March 2015

" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு



   " சுப்பையா உடையார்"  ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கிற்கான நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.   

 எதிர் வரும் JUNE 30 ம் திகதி அளவில் பணிகள் பூர்த்தி அடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது



















Tuesday, 17 February 2015

''அறிதல்'' நூல் வெளியீடு நிகழ்வு .....28 Feb 2015

செல்வம் கண்ணதாசனின்  ''அறிதல்''  நூல் வெளியீடு


தகவல் : திரு து. இரவீந்திரன்

Monday, 16 February 2015

வருடாந்த இல்ல மெய் வன்மை போட்டி - 2015

வருடாந்த இல்ல மெய் வன்மை போட்டிகள் 11-02-2015 அன்று நடைபெற்றது.  அலுவலக முன்றலில் இருந்து விருந்தினர்கள் பான்ட் வாத்திய சகிதம் மைதானதிற்கு அழைத்துவரப்பட்டனர் .