இன்று கோலாகலமாக நடைபெற்ற சுழிபுரம்
விக்ரோறியாக்கல்லூரியின் பரிசளிப்பு விழா அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் நூற்ருக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு
வருடமும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறும் இந்தப் பரிசளிப்பு
விழா விக்ரோறியாக்கல்லூரியின் OSAs,SDS,SDC,EDC ஆகியோரின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது .
Saturday, 29 September 2012
Friday, 28 September 2012
நாவலர் முன் பள்ளி வேலைத்திட்டம்
நாவலர் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் நாவலர்
முன் பள்ளியில் ,மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசியமான சில வேலைத்திட்டங்கள்
பூர்த்தி அடையாமல் இருக்கின்றது .அதில் ஒரு வேலைத்திட்டமாக அங்கு இருக்கும்
நீர்த்தாங்கி செயல்படாமல் காணப்படுகின்றது .இவ் வேலைத்திட்டத்தைச் செய்து தரும்படி
E.D.C அமைப்பாளர்களிடம் முன்பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ,E.D.C
அமைப்பாளர்கள் யுகே பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் அங்கீகாரத்துடன்
இவ் வேலைத்திட்டத்தை செய்து முடித்துள்ளனர் .
See Photos
See Videos
See Photos
See Videos
Thursday, 27 September 2012
ஐக்கிய சங்கக் சைவ வித்தியாசாலையின் புலமைப் பரிசில் பரீட்சை
இந்த
ஆண்டு ஐ .ச.சை
.வித்தியாசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் 58 மாணவர்களில் சித்தியடைந்தோர் 70.68% வீதமாகும் .41 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தி அடைந்துள்ளார்கள்
Wednesday, 26 September 2012
Prize Giving Invitation
Victoria College prize giving and founder's day
will be held on Saturday 29th Sept 2012 at 2PM
See Price giving Invitation
See Price giving Invitation
Tuesday, 25 September 2012
வெற்றி வீராங்கனைகளுக்கு வரவேற்ப்பு
அகில இலங்கையில் சுழிபுரம் விக்ரோறியாக்
கல்லூரியின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டப்
போட்டியில் விளையாடி தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து தமிழர்களின்
பெருமையை உலகிற்கு அறியத்தந்து இருக்கின்றார்கள் .இந்த வீராங்கனைகளின் வெற்றி விழா
வடக்கம்பரை அம்மன் கோவிலில் இருந்து பாண்ட் வாத்தியங்களுடன் மக்கள் புடை சூழ
வரவழைத்து வந்த கண்கொள்ளாக்காட்சி
விக்ரோறியா பெண்கள் துடுப்பாட்ட அணி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்
அகில இலங்கைப்
பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் பெருவிளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான
துடுப்பாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இரண்டாம் இடத்தைப்
பெற்றுக் கொண்டது. இறுதிப் போட்டியில் 30 ஓட்டங்களை 5 பந்துப் பரிமாற்றத்தில்
விக்ரோறியா அணி பெற்றது. எதிர்த்தாடிய விஜயபாகு மகளிர் கல்லூரி 4.4 பந்துப்
பரிமாற்றங்களில் குறித்த இலக்கை அடைந்ததால் விக்ரோறியாக் கல்லூரி அணியினர் இரண்டாம்
இடத்தைப் பெற்றனர்.
Under 19 Cricket Team வரவேற்பு நிகழ்வு
அகில இலங்கை மென்பந்து துடுப்பாட்டப்
போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட யா/விக்ரோறியாக் கல்லூரியின் 19
வயதின் கீழ் பெண்கள் அணியினருக்கான வரவேற்பு உபசார நிகழ்வின் போது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
Monday, 24 September 2012
Our under 19 girls cricket team's great achieivement
Victorian girls are the runners up in the
national cricket. We are really proud of our school and the team. The whole
tamil community should be proud of this achievement. This result proves how hard
the girls have worked with commitment and dedication during the past
year.
Sunday, 23 September 2012
புதிய செய்தி - எமது கனவு நினைவாகும் வேளை
சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பத்தொன்பது
வயதிற்கு உட்பட்ட மென்பந்து துடுப்பாட்ட மாணவிகள் அரையிறுதிப்போட்டியில் வெற்றி
பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.இலங்கையில் திறமைபடைத்த அத்தனை
பாடசாலைகளுக்கு மத்தியில் எமது கல்லூரி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருப்பது
தமிழர்களாகிய எமக்கு பெரும் சந்தோசத்தைத் தருகின்றது.இறுதிப்போட்டியில்
விக்ரோறியாக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற தமிழர் களாகிய நாம் எல்லோரும்
அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Saturday, 22 September 2012
மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டம்
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின்
பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டம் எதிர் வரும் 22,23
ஆம் திகதிகளில் Poththupiddyaa Mahavidyalaya மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
இப்போட்டி மாகாணமட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள் தேசிய மட்டத்தில் விளையாட உள்ளார்கள்.அதனால் எமது கல்லூரி மாணவிகள் இப் போட்டியில் சிறப்புடன் விளையாட கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் ஏனைய பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றார்கள்.
இப் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றால் யுகே பழைய மாணவர் ஒன்றியம் 25,000 ரூபா பணத்தை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க முன்வந்து உள்ளது. எமது கல்லூரி அணி வெற்றி பெற யுகே பழைய மாணவர் ஒன்றியம் மீண்டும் பாட்டுக்களை தெரிவிக்கின்றது.
22/09/2012
இப்போட்டி மாகாணமட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள் தேசிய மட்டத்தில் விளையாட உள்ளார்கள்.அதனால் எமது கல்லூரி மாணவிகள் இப் போட்டியில் சிறப்புடன் விளையாட கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் ஏனைய பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றார்கள்.
இப் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றால் யுகே பழைய மாணவர் ஒன்றியம் 25,000 ரூபா பணத்தை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க முன்வந்து உள்ளது. எமது கல்லூரி அணி வெற்றி பெற யுகே பழைய மாணவர் ஒன்றியம் மீண்டும் பாட்டுக்களை தெரிவிக்கின்றது.
22/09/2012
Thursday, 20 September 2012
Volley Ball News
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பதினைந்து வயதிற்குட்பட்ட மாணவர்களின் தேசிய ரீதியிலான Volley ball விளையாட்டுப்போட்டி D.S.Senanayaka College Ground, Colombo - 7 , மைதானத்தில் 23 , 24 ஆம் திகதிகளில் நடைபெறஉள்ளது.பங்குபற்றும் அனைத்து மாணவர்களும் போட்டியில் வெற்றிபெற கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் யாவரும் தமது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Monday, 17 September 2012
Cupboard Donation
ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின்
அனுசரணையுடன் திரு.பாலசுப்பிரமணியம் பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் band
வாத்தியக்கருவிகள் மற்றும் சங்கீத இசைக்கருவிகள், நடன உபகரணங்கள் போன்றவற்றை
பேணுவதற்காக 100,000/= பெறுமதியான 06 அலுமாரிகளைப் பெறுவதற்கான நிதியுதவியினை
வழங்கியுள்ளார்.
Sunday, 16 September 2012
Elle News
தேசிய மட்ட எல்லே போட்டிகளில் கலந்து கொள்ள பேராதனைப் பல்கலைக்கழக மைதானத்திற்கு எமது கல்லூரியின் பெண்கள் அணி சென்றிருந்தது. இவர்கள் St. Paul's Girls College வீராங்கனைகளுடன் விளையாடினார்கள். முதலில், விக்ரோறியா வீராங்கனைகள் களத்தடுப்பில் ஈடுபட்டனர். St. Paul's Girls College அணி 04 ஓட்டங்களைப் பெற்றது. விக்ரோறியா அணியும் 04 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது. வெற்றியைத் தீர்மானிப்பதற்காக 15 பந்துப்பரிமாற்றங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டபோது விக்ரோறியா 02 ஓட்டங்களைப் பெற St. Paul's Girls College 03 ஓட்டங்களைப் பெற்றதால் வெற்றி வாய்ப்பு தவறிப்போனது.
Saturday, 15 September 2012
விளையாட்டுச் செய்தி
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மாணவர்களின் தேசிய ரீதியிலான எல்லே விளையாட்டுப்போட்டி கண்டி பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெறஉள்ளது.பங்குபற்றும் அனைத்து மாணவர்களும் போட்டியில் வெற்றிபெற கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் யாவரும் தமது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
Wednesday, 12 September 2012
மரண அறிவித்தல் - பாஸ்கரன் வர்சனா நேற்று (12.09.2012) காலமானார்.
எங்கள் கல்லூரியில் க.பொ.த. உயர்தரம் வணிகப்பிரிவில் பயிலும் மாணவி செல்வி.வர்சனா பாஸ்கரன் நேற்று காலை காலமாகிவிட்டார். இவர் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.அ.பாஸ்கரன் (ஆசிரியர், சித்தன்கேணி ஸ்ரீகணேச வித்தியாசாலை) அவர்களின் அன்பான மகள். இவரது சகோதரர்கள் எமது கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் (பா.அருள்ராஜன், பா.அருள்வேந்தன்) கல்வி பயில்கின்றார்கள். எமது கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியை அல்லிராணி, முன்னாள் பிரதி அதிபர் குணபாலசிங்கம் ஆகியோரின் மருமகள். இன்று வர்சனா அவர்களின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற போது மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இரங்கலுரை ஆற்றி ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகள் செய்தனர். பண்ணாகம், சுழிபுரம் இவரது முகவரியாகும்.
News-J/Victoria College
மண்ணுலகை விட்டு இறைவனடி சேர்ந்த மாணவி
பண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் திரு.திருமதி.பாஸ்கரன்-காயத்திரி தம்பதிகளின் அன்பு மகளும்,சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவியுமான செல்வி.பாஸ்கரன்-வர்சனா அவர்கள் 12.9.2012 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தியுள்ளார்.
பாஸ்கரன்-வர்சனா அவர்கள் விக்ரோறியாக் கல்லூரியில் கல்விகற்கும் காலங்களில் சிறந்த பண்பானவரகவும்,கல்வியில் எல்லாப்பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரியின் ஏனைய மாணவர்களுக்கும் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டினார்.செல்வி வர்சனா அவர்களின் இழப்பு எமது கல்லூரிக்கு மிகவும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் யாவரும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாம் யாவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.
அனுதாபங்களுடன்
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Tuesday, 11 September 2012
All Island School Games - 2012 - Tournament schedule
Our school will
participate in the following games.
3. Volley Ball - Un 15 Boys - September 23, 24 - at D.S.Senanayaka College Ground, Colombo - 7
4. Athletics Games - October 9, 10, 11, 12, 13 - at D.A.Rajapaksha Ground, Beliatta
1. Elle - Un 19 Girls - September 15, 16,
17 - at Peradeniya University Ground, Kandy.
2. Soft Ball Cricket - Un 19 Girls -
September 22, 23 - at Poththupiddya Maha Vidyalaya Ground (Near
Panandura)3. Volley Ball - Un 15 Boys - September 23, 24 - at D.S.Senanayaka College Ground, Colombo - 7
4. Athletics Games - October 9, 10, 11, 12, 13 - at D.A.Rajapaksha Ground, Beliatta
Saturday, 8 September 2012
Friday, 7 September 2012
பழைய மாணவன் கல்லூரிக்கு விஜயம்
இலண்டனில் வசித்து வரும் சுழிபுரம் விக்ரோறியாக்
கல்லூரியின் பழைய மாணவனும்,யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினருமான
திரு.T.S. தர்மலிங்கம் அவர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின் தனது சொந்த ஊரான
சுளிபுரத்திற்கு விஜயம் செய்ததுடன் தான் கற்ற கல்லூரியை மறவாது அங்கு சென்று
கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னர் கல்லூரியில் இன்று
நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில் மாணவர்கள் மத்தியிலும் சிறந்த உரையாடல்
ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
See Photos
See Video
See Photos
See Video
Tuesday, 4 September 2012
பறாளாய் விளையாட்டுக்கழகத்திற்கு உதவி வழங்குவோம்
பறாளாய் முருகன் அருளினால் பல வருடங்களாக
இயங்கிவரும் பறாளாய் விளையாட்டுக் கழகம் இன்று தங்களால் முடிந்த நற்பணிகளை
சுழிபுரம் மக்களுக்கு செய்து வருகின்றார்கள்.குறிப்பாக நாவலர் சனசமூக
நிலையம்,நாவலர் முன்பள்ளி மற்றும் திருவிழாக்காலங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்
போன்ற நற்சேவைகளை செய்து வரும் இவர்கள் தற்க்காலங்களில் பல சேவைகளைச் செய்வதற்கு
தகுந்த வசதிகள் அதாவது பண வசதி இல்லாத நிலையில் அவகளின் ஆர்வம்
தடைப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)