Friday, 7 November 2014

விளையாட்டு : 13 வயதின் கீழான துடுபாட்டம்

 
13 வயதின் கீழான அணியினற்கான
ஆட்டத்தில் பூவா -தலையாவில்
வெற்றி பெற்ற யாழ் இந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடும்படி விக்டோரியாவை பணித்தது. சியாமளன் 22 ,  வேணுதாஸ் 19  ஜீவகன்  18 ஆகியோரின் ஓட்டங்களுடன் 35 பந்து பரிமாற்ற முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது . பந்து வீச்சில் அங்கவன் 3, சங்கவன் 3 துசிதன் 2 இலக்குகளை வீழ்த்தினர்.

                பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணியினர் சாருஜன் 23 சங்கவன் 10  ஓட்டங்களுடன் 23.4 பந்து பரிமாற்றங்கள் முடிவில்  சகல இலக்குகளையும் இழந்து 71 ஓட்டங்களை பெற்றது . பந்து வீச்சில் பவிதரன் 4 ,பிரசாந்த் 4 இலக்குகளை வீழ்த்தினர்.

 2 வது தடவை

விக்டோரியா  61 ஓட்டங்கள்

பவிதரன்  19  ஓட்டங்கள்

ஹரிகரன் 3,துசிதன் ,அங்கவன் ,சங்கவன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.

       பதிலிற்கு துடுபெடுத்தாடிய  யாழ் இந்து அணி  5 பந்து பரிமாற்றங்கள் முடிவில் 35  ஓட்டங்களை பெற்றது.  பந்து வீச்சில் சியாமளன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

          வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் நிறைவு பெற்றது .