Tuesday, 11 November 2014

நிறுவுனர் நினைவுதினமும் பரிசளிப்பும் - 2014

  138 வருடங்களை கடந்த விக்டோரியா கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும்-பரிசளிப்பு விழாவும்  31 ஒக்டோபர் 2014 அன்று பிற்பகல் 1: 30 மணியளவில்  கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
    
      ஆரம்ப நிகழ்வாக கல்லூரி பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களால் ஸ்தாபகர் செல்லப்பா அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

     கல்லூரி அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பணிப்பாளர் திரு.ஆ.ராஜேந்திரன் அவர்களும் .சிறப்பு விருந்தினராக இதய சத்திர சிகிச்சை நிபுணர் திரு.‍‍‌‌ஞானச்சந்திரமூர்த்தி.காந்திஜி அவர்களும் நிறுவுனர் நினைவுப் பேருரை ஆற்றுவதற்கு பழைய மாணவர் சங்க தலைவரும் ஒய்வு நிலை விரிவுரையாளருமாகிய திருமதி.நா.செல்வநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.முன்னாள் அதிபர்கள் திருமதி.அரும்தவசெல்வி வேலுபிள்ளை அவர்களும் பிரம்மஸ்ரீ..வ.ஸ்ரீகாந்தன் அவர்களும்   -ஆசிரியர்கள் பழையமாணவர் சங்கத்தினர் பாடசாலை அபிவிருத்திக் குழுவனர்  பெறோர்கள்,மாணவர்கள்,

 

நலன்விரும்பிகள் என பலராலும் நிறைந்திருந்த கனகரத்தினம் கட்டட தொகுதி முன்பாக அமைகப்படிருந்த பந்தல்களும் அதன் முன்பாக அமைந்த மேடையில் நிகழ்வுகளும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்தன.விருந்தினர்களின் மங்கல விளகேற்றலை தொடர்ந்து இறைவணக்கம் செலுத்தப்பட்டது .பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து அதிபர் தலைமையில் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதிபர் தனது ஆண்டறிகையை சம்ர்பிதததனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.  

                ஆங்கில நாடகம், ஆங்கில குழுப்பாடல் ,தனிநடனம் ,கொழுந்து நடனம் ,தமிழ் நாடகம் ஆகிய கலை நிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கியமையும் இடம்பெற்றன. நன்றியுரையை தொடர்ந்து   நிறைவாக கல்லூரி கீதம் இசைக்கபட்டது                 .

 மேலதிக படங்களிட்கு ..........