அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கத்தினால் எமது கல்லூரியில் உருவாக்கப்பட்ட
கணனிக்கூடம் இன்று மாணவர் கற்றல் செயற்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வு
நடைபெற்றது. அவுஸ்ரேலியாவிலிருந்து
திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களும் திரு.சு.சத்தியகீர்த்தி அவர்களும் இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். இவர்களுடன் கனடாவிலிருந்து வருகை தந்த திரு.இ.விஜியநாதன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த திரு.அ.தயாபரன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.இ.ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருந்தினர்கள் பட்டுச் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டனர். திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, திரு.இ.விஜியநாதன் ஒன்றிணைந்து கணனிக்கூடத்தை திறந்துவைத்தனர். Asaippillai Teacher Memorial IT Lab பெயர்ப்பலகையினை திரு.அ.நித்தியானந்தமனுநீதி திரைநீக்கம் செய்துவைத்தார். குளிரூட்டிகளை திரு.இ.விஜியநாதன் இயக்கினார். திரு.அ.தயாபரன் கணனிகளின் செயற்பாட்டினை ஆரம்பித்துவைத்தார்.