எதிர்வரும் 05.12.2012 அன்று பல இலட்சம் ரூபா செலவில் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட "RIDGE WAY HALL" மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு திறந்து விடப்படவுள்ளது .இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளஉள்ளார் ,அத்துடன் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் ஆகிய MR.K.K.Nadaraja, MRS.A.Veluppilai, MR.S.Pathmanathan, MR.K.Santhirabalan , இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்பது சிறப்பு அம்சமாகும் .
1905 ஆம் ஆண்டு நிறுவக முகாமையாளர் திரு .C. முதலியார் -செல்லப்பா அவர்களால் கட்டப்பட்ட இந்த "RIDGE WAY HALL" பல இலட்சம் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது .இந்த மண்டபம் நூறு வருடங்களுக்கு மேற்பட்டதால் அதன் தரை மாணவர்களின் பாவனைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது .கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தரையை புனரமைப்பதற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்து செலவினை ஏற்றுக்கொண்டது .
இம்மண்டப வேலைத்திட்டத்தை குறுகிய காலத்தில் செய்து முடிக்க அயராது உழைத்த E.D.C அமைப்பினரும் ,மற்றும் தொல்புரம்"Marble Company"யினரும் சேர்ந்து சிறந்த முறையில் இந்த மண்டபத்தை அமைத்துத் தந்துள்ளனர் .மண்டபத்தின் தரை ,மண்டபத்தின் விறாந்தை ,மேடை மற்றும் கதவுகள் உட்பட மண்டபத்தின் அனைத்துச் சுவர்களுக்கும் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது .

இவ்வனைத்து வேலைத்திட்டத்திற்கும் முழு ஆதரவு தந்த கல்லூரி அதிபர் ,மற்றும் S.D.S அமைப்பினர் ,தொல்புரம்" Marble Company"யினர் இவ் வேலைத்திட்டத்திற்கு அயராது உழைத்த E.D.C அமைப்பினர் யாவருக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது .
See Invitation