வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம்
கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்துள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வலிகாமம் கலவி வலயத்திற்கு உட்பட்ட நான்கு
கல்விக் கோட்டங்களிலும் மும் மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான
பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என
பிரதிக்கல்விப் பணிப்பாளாகளும் முகாமைத்துவ உதவியாளரும் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்கள்.
அதன்படி தெல்லிப்பழை கல்விக்கோட்டத்திறக்கான நிலையம் மல்லாகம் மகா
வித்தியாலயத்திலும் , சங்கானை கல்விக் கோட்டத்திற்கான நிலையம் வட்டுகோட்டை
இந்துக் கல்லூரியிலும் , உடுவில் கல்விக்கோட்டத்திற்கான நிலையம்
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும், சண்டிலிப்பாய் கோட்டத்திற்கான
நிலையம் மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையங்களின் ஊடாக மாணவர்கள் ஆசிரிர்கள் அதிபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.