மேற்படி பாடசாலை விக்ரோறியாக் கல்லூரியின் ஊட்டற் பாடசாலைகளில் ஒன்று என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்கு கற்கும் மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறைகொண்டு அர்ப்பணிப்புடன்
அப்பாடசாலை அதிபர் திரு பாலகுமாரும் ஆசிரியர்குழாமும் அர்ப்பணிப்புடன்
செயற்பட்டுவருவது யாவரும் அறிந்ததே.
சுழிபுரம் கல்வியபிவிருத்திக் குழுவும் அவ்வப்போது இப்பாடசாலை அதிபருடன்
கலந்துரையாடி வேண்டிய உதவிகள் செய்து வருவது கண்கூடே.
இந்தவருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களைத் தயார்படுத்தும்
வேலைத்திட்டத்திற்கு ரூபா 100 000.00 தேவைப்படுவதாக அப்பாடசாலையின் அதிபர் கல்வி
அபிவிருத்திக் குழுவிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார்.
இவ்வேண்டுகோளானது ஐக்கியராச்சியம் பழையமாணவர் ஒன்றியத்திடம்
முன்வைக்கப்பட்டபோது சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்தவகையில் இவ்விழாவிற் கலந்துகொண்ட கல்வியபிவிருத்திக் குழுவின் தலைவரும்
விக்ரோறியாக் கல்லூரியின் அதிபருமாகிய திரு வ ஸ்ரீகாந்தன் அவர்கள் ஐந்தாம் ஆண்டு
மாணவர்களின் மேலதிக வகுப்புகள் நடாத்துவதற்கென ரூபா 75 000.00 பெறுமதியான காசோலை
ஒன்றினை வழங்கியிருந்தார்.
முன்னேற்றம் அவதானிக்கப்பட்டு மிகுதி ரூபா 25 000.00 வழங்கப்படும் என்பதனையும் உறுதிகூறியிருந்தார்.
இந்நிதியூதவி வழங்கிய திரு சி இரவிசங்கர் மற்றும் ஐக்கியராச்சியம் பழைய மாணவர்
ஒன்றியத்திற்கு அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்