எமது ஊட்டற்பாடசாலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவருவது திருவடிநிலை பாடசாலை ஆகும். இம்மாணவர்களின் வரவு குறைவாக இருப்பதோடு கற்றலில் ஊக்கம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
எமது ஒன்றியமானது காட்டுப்புலம் பாடசாலைக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தினை (Dec/2013) மேற்கொண்டதைத் தொடர்ந்து அப்பாடசாலையில் மாணவர்கள் வரவு அதிகரித்ததோடு கற்றற் செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவதை அவதானித்த திருவடிநிலைப்பாடசாலையின் அதிபர் தமது பாடசாலைக்கும் அப்படியான ஒரு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தினை செயற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
EDC அமைபின் தலைவரும் விக்டோரியா கல்லுரி அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் ஐயா அவர்களின் சிபார்சின் அடிப்படையில், எமது ஒன்றியம் ரூபா 30 000.00 இனை வழங்க உள்ளது.
இவ் வேலைத்திட்டத்திற்கான நிதியுதவிற்காக, தா கமலநாதன் 15,500.00/-ரூபாவினையும் திரு சி. இரவிசங்கர் 14,5000.00/-ரூபாவினையும் எமது ஒன்றியம் ஊடாக நன்கொடையாக வழங்க முன் வந்த்துள்ளார்கள். .இவர்கள் எமது நன்றிக்குரியவர் ஆவார்கள்.