Thursday, 6 March 2014

Help for Naavalar

சைவத்தையும்  தமிழையயும் இருகண்கள் என போற்றி வளர்த்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். அவர் நினைவாக 1954ஆம் ஆண்டு சுழிபுரம் பறாளாயில் தோற்றிவிக்கப்பட்டு அக்கிராமத்தின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டு வருவது நாவலர் சனசமூக நிலையம் ஆகும்.

நாவலர் முன்பள்ளி மூலம் தரமான பிள்ளைகளை ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கு அனுப்பி அவர்களை விக்ரோறியாக் கல்லூரிக்கு அரும்பணி ஆற்றுகின்றனர்.

மேலும் படிப்பகத்தினை நடாத்துவதன் மூலம் பிரதேசமக்களின் அறிவு  மற்றும் அரசியற் பசியினைப் போக்குகின்றனர்.

அத்துடன் பறாளாய் விளையாட்டுக் கழகத்தினை நடாத்தி இளைஞர்களின் உடல் உள ஆரோக்கியத்தில் உதவு கின்றனர்.

பந்தல் சேவையினைக் கிராமக்களிற்கு வழங்குவதோடு வருடந்தோறும் பறாளாய் விநாயகர் முருகன் ஆலய திருவிழாக்களின் போது மக்களின் தாகத்தினைப் போக்க தண்ணீரப்பந்தல் நடாத்தி வருகின்றனர்.

இவ்வருடம் நாவலர் சனசமூக நிலையத்தின் மணிவிழா ஆண்டாகும்.

அவ்விழாவினைக் கொண்டாடுவதற்காக புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளிடம் நிருவாகத்தினரால் பல்வேறு வேண்டுகோள்கள்; விடுக்கப்பட்டன.

அவற்றில் பிரதானமானது நாவலர் பெருமானுக்கு ஓர் சிலைவைத்தல் என்பதனை ஏற்றுக் கொண்ட விக்ரோறியாக் கல்லூரியின் ஐக்கியராச்சியத்தின் பழைய மாணவர் ஒன்றியம் அதனைச் செய்து முடிக்க முன் வந்தது.

அவ்வேலைத்திட்டத்திற்கான மொத்தச் செலவு  ரூபா 50 000.00 இனை வழங்க ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர் முன்வந்துள்ளார் அவருக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.