யா சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் குறுகிய காலத்திலான அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமான அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்களது சேவைநலன் பாராட்டு விழா 10-03-2014 அன்று ஆசிரியர் திரு பஸ்ரியன் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் ஆசிரியர் கழகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்
விரும்பிகளால் இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 9.30 மணியளவில் சுழிபுரம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள அறுபத்து மூவர் குருபூசை மடத்திலமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் ஓய்வூ நிலை அதிபர் திரு சிவகணேசசுந்தரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மணிவிழாத் தம்பதியர் மங்கல வாத்தியம் சகிதம் பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
பாதை நீளம் மக்கள் நிறைகுடம் வைத்து தம்பதியருக்கு மாலையணிவித்து ஆலாத்தி எடுத்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.
சுழிபுரம் மேற்கு பாரதி முன்பள்ளிச் சிறார்களும் இந்நிகழ்வில் கலந்து அதிபர் தம்பதியினரை மலர்தூவி வரவேற்றமை மனதை நெகிழவைத்தது.
பின்னர் “பாண்ட்” வாத்தியசகிதம் பூரண மரியாதையூடன் தம்பதியர் “றிஐ;வே” மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர்.
பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவாரமும் அதனைத்தொடர்நது அற்புதமான மங்கல இசை மனதுக்கு உற்சாகமூட்டியது.
பின்னர் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனமும் மதகுருமாரின் ஆசியூரையூம் திரு சுதாகரன் ஆசிரியரின் வரவேற்பு உரையும் தலைமை உரையும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவ மாணவியரின் தமிழ் ஆங்கில உரைகளும் கவிதைகளும் கல்விப்புலம் சார்ந்தோர் பிரதேசச் செயலர் பழைய மாணவர் சங்கத்தினர் வாழ்நாள் அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை முன்னாள் பிரதி அதிபர் திரு கா இந்நிரராஐh ஆகியோரின் பாராட்டுரைகளும்; இடம்பெற்றன.
ஐக்கிய இராச்சியத்திருந்து வருகைதந்திருந்த அந்நாட்டுப் பழையமாணவர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கரின் பாராட்டு உரையும் இடம்பெற்றது.
அவூஸ்திரேலியா கனடா ஐக்கியராச்சியம் ஆகிய மூன்னு பழையமாணவர் சங்கங்களும் ஒன்றிணைந்து பதக்கம் அணிவித்து அதிபரிற்கு தமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்கள் ஆகியோரும் பதக்கம் அணிவித்து அதிபரைக் கௌரவித்தனர்.
பூமாலைகள் மலைபோல் குவிந்தன் பாமாலைகள் மனதை நெகிழ்த்தின. அனைவரது அன்பு வெள்ளத்திலும் அதிபர் திக்குமுக்காடிப்போனார்.
விழாவின் சிறப்பம்சமாக அதிபரின் ஏற்புரை அமைந்திருந்தது.
இறுதியாக நன்றி உரையும் கல்லூரி கீதமும் இடம்பெற்றன.
பிற்பகல் 4.00 மணியளவில் ஐக்கியராச்சியம் பழையமாணவர் ஒன்றியம் சார்பாக திரு சி இரவிசங்கரின் ஏற்பாட்டில் மதியபோசன விருந்தளிக்கப்பட்டது.
)
More photos and full cover Videos to come pls keep coming back to this section.