யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து
துடுப்பாட்டப் போட்டிகள் நேற்றும்
இன்றும் நெல்லியடி மத்திய மாகா வித்தியாலய மைதானத்தில்
நடைபெற்றன.எமது கல்லூரியின்
பெண்கள் துடுப்பாட்ட அணி மாவட்ட மட்டத்தில் முதன்மை வெற்றியை
பெற்று சம்பியன்களாகத்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சங்கானைக்கோட்டம், வலிகாமம்
வலயம் என பாடசாலைகளுக்கிடையில்
நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற
எங்கள் கல்லூரி பெண்கள் அணி
மாவட்ட
மட்டத்திலான சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில்
வட்டு.இந்துக் கல்லூரியைச்
சந்தித்தது. இவ்விரு பாடசாலைகளும் சங்கானைக் கல்விக் கோட்டத்தைச்
சேர்ந்தவையாகும்.
கோட்டமட்டத்திலும் வலய
மட்டத்திலும் இவ்வணியுடன் விளையாடியே எமது அணி முதன்மை
பெற்றது.
தொடர்ந்தும் மாவட்ட மட்ட போட்டியிலும் இவ்வணியை சந்தித்த போது
முதலில்
துடுப்பெடுத்தாடிய விக்ரோறியா அணி 10 பந்து பரிமாற்றங்களில் 89 ஓட்டங்களைப்
பெற்றது.அடுத்து
துடுப்பெடுத்தாடிய வட்டு.இந்துக் கல்லூரி அணி 63 ஓட்டங்களை மட்டும் பெற்றது.26
ஓட்டங்களால்
வெற்றி பெற்ற விக்ரோறியா அணி
தொடர்ந்து நாலாவது வருடமாக மாவட்டச்சம்பியனாக
தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.விளையாட்டுத் துறை முதல்வர்
திரு.சி.சிவச்செல்வன்,
அணிப்பொறுப்பாசிரியர் செல்வி.கு.தாரணி, பயிற்றுநர்களான 'விக்ரோறியன்ஸ்'
திரு.
ந.சிவரூபன்,திரு.தி.சுஜிர்தன் மற்றும்
திரு.க.திருக்குமாரன் ஆசிரியர் கல்லூரியின் அணியினை
இப்போட்டிகளுக்காக வழிப்படுத்தினர். பழைய
மாணவர்களும் வருகை தந்து
ஊக்குவித்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.