எமது கல்லூரியில் நவீனமயப்படுத்தப்பட்ட திறந்த வெளியரங்கு ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நாட்டுவிழா தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சிறப்பாக நடைபெற்றது. “அமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்த திறந்த வெளியரங்கு” அன்னாரின் குடும்பத்தவர்களின் நிதியுதவியுடன் நிறுவுவதற்கான திட்டம் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை அவர்களின் பணிக்காலத்தில் இடப்பட்டது. எனினும் மைதானத்தை 400 மீற்றர் ஓடுபாதை கொண்டதாக விரிவாக்கம் செய்தல் செயற்பாடுகளினால் இத்திட்டத்திற்கான இடத்தை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சென்றாண்டில் 400 மீற்றர்
ஓடபாதையுடனான மைதானம் அமைக்கப்பட்ட பின்னர் உரிய இடம் தெரிவுசெய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் திருமதி.ச.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமாளுக்கு தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் முன்னாள் அதிபர்களான திருமதி.அ.வேலுப்பிள்ளை, திரு.வ.ஸ்ரீகாந்தன் மற்றும் பழைய மாணவர்களான திரு.அ.மனுநீதி (ஓய்வு நிலை
உதவிக்கல்விப்பணிப்பாளர்) செல்வி.நி.அப்புத்துரை, திரு.செ.கண்ணதாசன் (செயலாளர் பாடசாலை அபிவிருத்திக்குழு) திருமதி.நாச்சியார் செல்வநாயகம் (தலைவர் பழைய மாணவர் சங்கம்) திரு.இ.ஸ்ரீரங்கன் (செயலாளர் பழைய மாணவர் சங்கம்) திரு.தவராஜா (உப தலைவர் பழைய மாணவர் சங்கம்) திரு.சுதாகரன் (பொறியியலாளர் நீர்ப்பாசனத்திணைக்களம்) திரு.செ.சிவகுமார் (பிரதி அதிபர்) திரு.பொ.சுதாகரன் (தலைவர் ஆசிரியர் கழகம்) கல்லூரி மாணவர்கள் சார்பில் செல்வன் நிரோஜன் செல்வி கார்த்திகாயினி மற்றும் கல்லூரி சமூகத்தினர் பலர் அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்வின் பின்னர் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.
தகவல் : செ. கண்ணதாசன்