Saturday, 17 January 2015

கண்ணீா் அஞ்சலி - அமரா் திரு.பாலசுந்தரம் வைத்திலிங்கம்

{ஓய்வு பெற்ற முன்னாள் கூட்டுறவு ஆணையாளரும்,விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் (ஐக்கியராட்சியம்)} தோற்றம் 22.07.1918 மறைவு 09.01.2015
மலேசியாவை பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை முன்னாள் வதிவிடமாகவும் தற்போதைய வாழ்விடமாக லண்டனையும் கொண்டதிரு பாலசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 09.01.2015 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் எமது பாடசாலையின் பழையமாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவராக இருந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் சேவைகள் அளப்பரியன.அவை எம்மால் மறக்க முடியாதனவாக கல்மேல் எழுத்துப் போல் என்றும் நிலையாக உள்ளது.இவரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகவும் தாங்கொணா துயரையும் தந்துள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.01.2015 அன்று Hill house,Bishopsford Road, Morden,Surrey,SM4 6BL என்னும் விலாசத்தில் நடைபெற உள்ளது.
இவரின் இழப்பால தவிக்கும் இவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம்
ஐக்கியராட்சியம்.

More Details