Wednesday, 13 April 2016

சபாபதிப்பிள்ளை - ஆசைமுத்து ஞாபகார்த்தப் பரிசில் - 2015 க.பொ .த . (சா /த )

சபாபதிபிள்ளை-ஆசைமுத்து ஞாபகார்த்தப் பரிசில்கள் 2015 க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் A சித்தியினை பெற்ற 12 மாணவர்களிற்கும் விஞ்ஞான பாடத்தில் A சித்தியினை பெற்ற 9 மாணவர்களிற்கும் வழங்கப்பெற்றன.
           கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு விருந்தினர்களாக முன்னாள் பிரதி அதிபர் திரு .செ.சிவகுமாரன் அவர்களும் எந்திரி வி .உமாபதி அவர்களும்  ,  முன்னாள் கணித ஆசான் திரு.க .குகப்பிரியன் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களிற்கான பரிசில்களை வழங்கினர்.

9 A பெற்ற செல்வன் சூரியகுமாரன் சேயோன்,  செல்வன் ராசதுரை கரன் ஆகியோருக்கான சிறப்புப் பரிசில்களை முன்னாள் பிரதி அதிபர் திரு  .செ.சிவகுமாரன் அவர்கள் வழங்கினார்..
மேற்படி பரிசில்ககான பரிசில்களிட்கான நிதியுதவியினை ஜேர்மன் நாட்டில் வதியும் விக்டோரியா பழைய மாணவர்களும் ஜேர்மன் விக்டோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகரும் முன்னாள் புதிய கணித ஆசானுமாகிய திரு.சபாபதிப்பிள்ளை பாலக்கிருஷ்ணன் அவர்களும்,ஜேர்மன் விக்டோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.ஆசைமுத்து .சுதாகரன் அவர்களும் வழங்கியுள்ளனர்.உப அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்விற்கான நன்றி உரையினை கணித ஆசிரியை செல்வி.சிவயோகவதனி சிற்றம்பலம் அவர்கள் வழங்கினார்.

Saturday, 2 April 2016

பெரியதம்பிரான் கோவிலில் வடமேற்குத் திசையில் மகாலட்சுமி பிரதிஷ்டை ......

பெரியதம்பிரான் கோவிலில் வடமேற்குத் திசையில் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 3 ஏப்ரல் ஆகிய இன்று நடைபெறவுள்ளது.மேற்படி சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை சுப்பையா பத்மநாதன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.