" வளர்ச்சி கண்டு வரும் யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரி " எனும் தலைப்பில் 10.01.2014 அன்று தினமுரசு பத்திரிகைஜில் பாடசாலை எவ்வாறு உருவகபட்டது, ஏன் உருவாகியது , ஆரம்பகாலம் தோட்டு இன்று வரையான அதிபர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் அற்பனிபுகள் போன்றவையும் , மேலும் கடந்த காலம் களின் பாடசாலைகளின் சாதனைகளின் சுருக்கம் பற்றியும், படம்களும் பிரசுரிக்கப் பட்டுள்ளது .
Saturday, 11 January 2014
Tuesday, 7 January 2014
மரண அறிவித்தல் திரு கதிரவேலு நடராஜா
பிறப்பு : 22 பெப்ரவரி 1928 — இறப்பு : 3 சனவரி 2014
| யாழ்.
சுழிபுரம் நெல்லியானைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், லண்டன் ஆகிய
இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு நடராஜா அவர்கள் 03-01-2014
வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வேதவனம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா லட்சுமியார் தம்பதிகளின் அருமை மருமகனும், மனோன்மணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும், வேதசொரூபி(ரூபி) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை கதிரித்தம்பி அவர்களின் அன்புச் சகோதரரும், அனந்தபாலன்(பாலன்- Lucky Window) அவர்களின் பாசமிகு மாமனாரும், லட்சுமி ரிஷால், சாளினி, பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும், சயன், சியன்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| பாலன்(மருமகன்) |
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/01/2014, 08:00 மு.ப
முகவரி: The Centre, Milton Rd, Wallington SM6 9RP, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/01/2014, 10:45 மு.ப
முகவரி: South London Cremetorium, Streatham Park Cemetary, Rowan Rd, SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு
பாலன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086683980
செல்லிடப்பேசி: +447956114204
ரூபி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939822421
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903497344
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447506719750
Monday, 6 January 2014
வதந்திகளை நம்ப வேண்டாம், Victoria College follows the Governments Instructions
அன்பான சுழிபுரம் வாழ் மக்களே வதந்திகளை நம்ப வேண்டாம் !
எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பற்றி சில தொலைக்காட்சிகளிலும் ,இணையத்தளங்கலிலும் ,பத்திரிகைகளிலும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பிரசுரித்து வருவது எமது கல்லூரியின் வளர்ச்சியை பாதிக்க வைக்கக்கூடியதாக இருக்கின்றது. உண்மை எதுவென்று தெரியாத நிலையில் தவறான செய்திகளை நம்பவேண்டாம் .எமது கல்லூரி கல்வியிலும் ,விளையாட்டிலும் மற்றும் ஏனைய துறைகளிலும் சிறந்த நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்களது கல்லூரியில் சேர்ப்பதற்காக போட்டிபோட்டு வரும் நிலையில் எமது கல்லூரி நிர்வாகம் 70 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கே முதலிடம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஊட்டப்பாடசாலைகளான ஐக்கியசங்கம் ,பெரியபுலோ,காட்டுபுலம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் 70 புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு விக்ரோறியாக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அந்த அடிப்படையில் கல்வித்திணைக்களத்தின் விதியின்படி ஒருபாடசாலையில் நான்கு வகுப்புக்களே இருத்தல் வேண்டும் .ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் அடிப்படையில் 120 மாணவர்களே அனுமதிக்கப்படுவார்கள் .எமது கல்லூரியின் அதிபர் எமது பிள்ளைகளின் நலன் கருதி ஐந்து வகுப்புக்களில் 154 மாணவர்களை அனுமதித்துள்ளார் .மிகுதி சில மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை .இந்நிலையில் எமது கல்லூரி அதிபர் ஏனைய மாணவர்களின் நிலை பற்றி கல்வித்திணைக்களத்துடன் கலத்துரையா டியுள்ளார் .ஆரம்பத்தில் கல்வித்திணைக்களம் அனுமதி கொடுக்கவில்லை .பின் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்திணைக்களத்துடன் போராடியபின் மிகுதி 25 மாணவர்களுக்கும் தற்போது விக்ரோறியாக்கல்லூரியில் கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது .
வீண் வதந்திகளை நம்பவேண்டாம் .
*எமது ஒன்றியம் சங்கானை கல்வி மேம்பாட்டு கழகத்தலைவர் திரு .க .சிவானந்தனுடன் இன்று (06/01/2014) தொடர்பு கொண்ட போது கல்லூரியைப் பற்றி வரும் அனைத்து வதந்திகளுக்கும் (குறிப்பாக பதிவு இணையதளத்தில் வந்த செய்திகளுக்கும் ) தனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என உறுதியாகக் கூறியுள்ளார் . இதை உறுதி செய்ய விரும்புவோர் திரு சிவானந்தனை தொடர்பு கொள்ள விரும்பின் எமது காரியதரிசி திரு தா .கமலநாதன் (0044 7917 801 742) உடன் தொடர்பு கொள்ளவும்.
At the end of the day this is a government school.
If the government authorises us to admit 120 students then our principal can only give admission to 120 students.
If the government authorises us to admit 180 students then our principal can only give admission to 180 students. This is the current situation and we don’t know yet whether we are going to get extra support from the government. (eg Teachers)
No point blaming the principal and college administration. This matter is not in principal’s or college administrations hand.
நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பற்றி சில தொலைக்காட்சிகளிலும் ,இணையத்தளங்கலிலும் ,பத்திரிகைகளிலும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பிரசுரித்து வருவது எமது கல்லூரியின் வளர்ச்சியை பாதிக்க வைக்கக்கூடியதாக இருக்கின்றது. உண்மை எதுவென்று தெரியாத நிலையில் தவறான செய்திகளை நம்பவேண்டாம் .எமது கல்லூரி கல்வியிலும் ,விளையாட்டிலும் மற்றும் ஏனைய துறைகளிலும் சிறந்த நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்களது கல்லூரியில் சேர்ப்பதற்காக போட்டிபோட்டு வரும் நிலையில் எமது கல்லூரி நிர்வாகம் 70 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கே முதலிடம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஊட்டப்பாடசாலைகளான ஐக்கியசங்கம் ,பெரியபுலோ,காட்டுபுலம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் 70 புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு விக்ரோறியாக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அந்த அடிப்படையில் கல்வித்திணைக்களத்தின் விதியின்படி ஒருபாடசாலையில் நான்கு வகுப்புக்களே இருத்தல் வேண்டும் .ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் அடிப்படையில் 120 மாணவர்களே அனுமதிக்கப்படுவார்கள் .எமது கல்லூரியின் அதிபர் எமது பிள்ளைகளின் நலன் கருதி ஐந்து வகுப்புக்களில் 154 மாணவர்களை அனுமதித்துள்ளார் .மிகுதி சில மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை .இந்நிலையில் எமது கல்லூரி அதிபர் ஏனைய மாணவர்களின் நிலை பற்றி கல்வித்திணைக்களத்துடன் கலத்துரையா டியுள்ளார் .ஆரம்பத்தில் கல்வித்திணைக்களம் அனுமதி கொடுக்கவில்லை .பின் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்திணைக்களத்துடன் போராடியபின் மிகுதி 25 மாணவர்களுக்கும் தற்போது விக்ரோறியாக்கல்லூரியில் கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது .
வீண் வதந்திகளை நம்பவேண்டாம் .
*எமது ஒன்றியம் சங்கானை கல்வி மேம்பாட்டு கழகத்தலைவர் திரு .க .சிவானந்தனுடன் இன்று (06/01/2014) தொடர்பு கொண்ட போது கல்லூரியைப் பற்றி வரும் அனைத்து வதந்திகளுக்கும் (குறிப்பாக பதிவு இணையதளத்தில் வந்த செய்திகளுக்கும் ) தனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என உறுதியாகக் கூறியுள்ளார் . இதை உறுதி செய்ய விரும்புவோர் திரு சிவானந்தனை தொடர்பு கொள்ள விரும்பின் எமது காரியதரிசி திரு தா .கமலநாதன் (0044 7917 801 742) உடன் தொடர்பு கொள்ளவும்.
At the end of the day this is a government school.
If the government authorises us to admit 120 students then our principal can only give admission to 120 students.
If the government authorises us to admit 180 students then our principal can only give admission to 180 students. This is the current situation and we don’t know yet whether we are going to get extra support from the government. (eg Teachers)
No point blaming the principal and college administration. This matter is not in principal’s or college administrations hand.
நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
Friday, 3 January 2014
கண்ணீர் அஞ்சலி
சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவனும், ,விக்ரோறியாக்கல்லூரி யுகே பழைய
மாணவர் ஒன்றியத்தின் ஆரம்பகால உறுப்பினரும், எமது ஒன்றியத்தில் பலகாலம் பொருளாளராக
செயல்ப்பட்டு வந்தவருமாகிய திரு. க . நடராஜா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
திரு .க .நடராஜா அவர்கள் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வளச்சிக்காக தனது
உடல் நலனையும் பொருட்படுத்தாது எமது ஓன்றியத்திற்காக அயராது உழைத்தவர். எப்பொழுதும்
சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்கும் சிறந்த பண்பாளர் .நற்சிந்தனையும் ,சேவை
மனப்பான்மையும் நிறைந்த இவர் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார் .இவருடைய இழப்பு எமது
ஒன்றியத்திற்கு மட்டுமல்லாது எமது கல்லூரிக்கும் பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து விக்ரோறியன்கள் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.
அன்னாரின் இழப்பினால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஒன்றியம்
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது .
ஆழ்ந்த அனுதாபங்களுடன் விக்ரோறியன்கள் சார்பில்,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
எமது கல்லூரியின் வளர்ச்சியினையும் ஊட்டப்பாட சாலைகளின் முன்னேற்றத்தையும் தடுக்காதீர்கள்.
சுழிபுரம் வாழ் மக்களே ,எமது இனம் கடந்த காலங்களில் பல இன்னல்களையும் பல இழப்புக்களையும்
அனுபவித்த நிலையில் எமது மாணவர்களின் கல்வித்தரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வாறு சீர்செய்து மீண்டும் எமது சமுதாயத்தை படித்த சமுதாயமாக எப்படிக்
கொண்டுவருவது. என்பது பலரது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த அடிப்படையில் சுழிபுரம்
விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியம் கல்லூரியில் கல்விகற்கும் மாணவர்களின்
கல்வித்திறமைகளையும், விளையாட்டுத் திறமைகளையும் கல்லூரி நிர்வாகத்தின் ஊடாக தெரிந்து
கொண்ட நிலையில் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு சமூகமளிக்காது
வேலைக்குச் செல்வது ,கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை ,சிறந்த பெறுபேறுகளை பெறுவவைத்திலை
,விளையாட்டுத்துறையிலும் ஈடுபாடில்லை.இப்படி பல பிரச்சனைகளை அறிந்த நிலையில் எமது ஒன்றியம்
இப்பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும். எமது கல்லூரியில் அக்கறை கொண்ட சிலரின் உதவியுடன் எமது கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும்
மாணவர்களின் ஆரம்பக்கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்து தெரிந்தெடுத்தல் வேண்டும்.
என்ற நிலை ஏற்பட்டது.
ஐந்தாம் தரப்பரீட்சையில் தோற்றும் ஊட்டப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள்
யாவரும் சிறந்த பேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கும் தேர்வு செயப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தின் புள்ளிகள் அடிப்படையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவார்கள்
என்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த கல்லூரி
நிர்வாகத்தின் முடிவை எமது ஒன்றியம் முற்று முழுதாக ஆமோத்தித்தது.
ஏனெனில் ஊட்டப்பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் கடின முயற்சி எடுத்தப் படித்தல் வேண்டும் .பெற்றோர் இந்த
விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் ,மாணவர்கள் ஒழுங்ககாகப் பாடசாலைக்கு சென்று
படித்தல் வேண்டும் ,ஊட்டப்பாடசாளைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய அளவு அக்கறையை
மாணவர்கள் மீது செலுத்த வேண்டும் ,இவ்வாறான பல தீர்வுகளுக்கு மத்தியில் எமது யுகே பழைய
மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலையின் கல்வியை முடிந்த அளவு வளர்ப்பதற்காகவும்,
மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் ,கல்வி அபிவிருத்திக் குழு ஒன்றை நியமித்து
அதன் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஊட்டப்பாடசாலைகளுக்கு செய்து வருகின்றோம்.
அடுத்த சில வருடங்களில் ஊட்டப்பாடசாலை மாணவர்கள் எல்லோரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அந்த அடிப்படையில்
எமது ஒன்றியம் சில வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டோம். எமது வேலைத்திட்டங்களை ,எமது
கல்லூரியின் வளர்ச்சியை ,மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் சில
புத்திஜீவிகள் எமது கல்லூரிக்கு எதிராக பிரச்சனைகளைத் தூண்டி விடுவதை நாம் வன்மையாகக்
கண்டிக்கின்றோம் .இப்பிரச்சனையை கொண்டுவருபவர்கள் எத்தனைபேர் எமது கல்லூரியில் கற்று
பட்டம் பெற்றவர்கள் .இவர்களுக்கு எப்படி எமது கிராமத்தின் மீது திடீரென அக்கறை ஏற்பட்டது
.இவர்கள் எமது கல்லூரிக்கோ ,அல்லது ஊட்டப்பாடசாலைகளுக்கோ எந்த வகையில் நன்மை செய்தார்கள்
.என்றுமே இல்லை .இவர்களின் திட்டம் எமது கல்லூரியின் வளர்ச்சியை தடுப்பது ,எமது கிராமத்தின்
வளர்ச்சியை தடுப்பதுமே ஆகும் .
யாழ் மாவட்டத்தில் பல பாடசாலைகள் உதாரணமாக ,யாழ் இந்துக்கல்லூரி
,கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் 160 புள்ளிகளுக்கு மேல்
பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்வார்கள். எமது கல்லூரி மாத்திரம் இதற்கு
விதிவிலக்கா? எமது கிராமத்தின் வளர்ச்சிகும்
,கல்லூரியின் வளர்சிக்கும் இடையூறு ஏற்படாது பாதுகாப்பது விக்ரோறியன்கள் யாவரினதும்
கடமையாகும் .
எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலைகலில் கல்விகற்கும் மாணவர்களுக்கு
கல்வி ஊக்குவிப்புகளுக்கு செய்துவரும் உதவிகளை தடுத்து நிறுத்தும் முயற்ச்சிகளை முன்னெடுக்க
வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் .
நன்றி
தாமோதரம்பிள்ளை – கமலநாதன் ,
காரியதரசி ,
விக்ரோறியாக்கல்லூரி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
Wednesday, 1 January 2014
அர்த்தம்முள்ள கட்டுரை - மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள்.
இக்கட்டுரை அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் அல்ல, பொது சேவையில்
ஈடுபட்டதாக கூறும் சில எம்மூர்
தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
எழுதியவர் தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
தர்மபுரம் நந்தன்
NEED CHANGE
மலர்ந்துள்ள இப்புத்தாண்டு இந்த நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற ஆண்டாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கின்ற ஆண்டாகவும் அமையவேண்டும் என இறைவனைப் பிரர்ந்திப்பதுடன் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த உலகில் மற்றமில்லாதது மாற்றம் ஒன்றே என்ற என்கின்ற அறிஞர்களின்
தத்துவத்திற்கமைய எமது தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியைத் தோற்றுவிக்க
அனைவரது மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.
அந்தவகையில் வடக்கில் கடந்த 30 வருடப்போர், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள்
இங்குள்ள அதிகாரிகள் மற்றும் இந்த நாட்டில் வழுகின்ற அரசியல் வாதிகளின்
மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2009 ஆம்
ஆண்டுக்குப் பின்னர் இங்கு கடமையாற்றுகின்ற அரசாங்க அதிகாரிகளில் பல
மாற்றங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனால் சாமானிய மக்களின் அன்றாட
வாழ்வில் பல பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் தாம் செய்ய வேண்டிய கடமைகளைச்
செய்யாது இருப்பதுடன் தமது அதிகாரங்களுக்கு மேலாக செயற்படுவதனால்
ஒழுக்கவியல் கேட்பாடுகளும் சமூக நடத்தைகளும் புறழ்வடைந்துள்ளன.
அரசாங்க அதிகாரிகள் தமக்குக் கிழ் கடமையாற்றுகின்றவர்களிடமும் சாதாரண
மக்களிடமும் தமது சேவைக்குப் பாலியல் இலஞ்சம் கோருவதால் வடக்கில்
ஒழுக்கமும் சமூக நன்நடைத்தைகளும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய
விடயங்களாக்கப்பட்டுள்ளன.
உயரதிகாரிகளில் பலர் இலஞ்ச ஊழலுக்குப் பெயர்போனவர்களாக மறியுள்ளதால்
நேர்மையான அதிகரிகளும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலை
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நெறிகெட்ட சமூகம் வழ்ததற்கான தடயங்களைவிட அழிந்ததற்கான வராலாறுகளே அதிகமாக எழுதப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்காக
உழைக்க வேண்டிய பல அரசாங்க அதிகாரிகள் கண்ணிருந்தும் குருடர்களாக
மறியிருப்பது எம்மவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
வடக்கின் நிர்வாக அலகுகளைத் திட்டமிட்டு வழிபடுத்துகின்ற உயரதிகாரிகளும்
அரசியல்வாதிகளும் தகுதி குறைந்தவர்களுக்கு உயர்பதவிகளை வழங்குதல், தமது
அரசியலுக்காக குற்றவாளிகளைத் தண்டனைகளிலிருந்து காப்பாற்றுதல், தாமும்
குற்றங்களுக்கு உடந்தையாளர்களாக மாறுதல், மக்கள் நலச் சேவைகளை
முன்னிலைப்படுத்தி சேவையாற்றாமை, செத்துச்சேர்க்கும் நோக்குடன்
அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டுவருவதால்
சமூகத்தில் ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தைப் பாதகாக்க வேண்டிய சட்டப் பாதுகாவலர்களும் ஒழுக்கமில்லாத அரச
அதிகாரிகளுக்கு பாதுகாப்பினை வழங்குவது மேலும் மேலும் குற்றத்தை
அதிகரித்துள்ளது.
மலருகின்ற இந்தப் புத்தாண்டிலிருந்து எம்மவர்கள் மத்தியில் மற்றத்தைக்
கொண்டுவந்து எமது மக்களின் நிம்மதியான வாழ்வினை உறுதிசெய்ய வேண்டுமாயின்
அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதிகாரிகள் மாறவேண்டும்.
மாற்றமில்லாத மாற்றங்களின் ஊடாக அதிகாரிகளின் மனங்களில் மற்றத்தை
ஏற்படுத்துவதன் ஊடாக எம்மை நாமே வலுப்படுத்தி அழிவடைந்து செல்லுகின்ற எமது
கலை, கலாசார, பாரம்பரிய, பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
எனவே மலருகின்ற இந்தப் புத்தாண்டு அதிகாரிகளின் மனங்களில் மாற்றத்தை
ஏற்படுத்துவதாய் அமையவேண்டும். அல்லது அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்.
ஆதாரம் Tamil Press
அறிந்ததும் அறியாததும்,
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?
சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்.
ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்க முடியாது.
2013 ஆம் ஆண்டின் சிறந்த சேவையாளர்கள்
2012 – 2013 ஆம் ஆண்டு எமது சுழிபுரம் கிராமத்திற்கு
ஓர் பொற்காலமாகும் .குறிப்பாக சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் “Ridge Way”மண்டபப் புனரமைப்பு, புதிய சிற்றுண்டிச்சாலை, புதிய கணினிக்
கூடம், மைதான விஸ்தரிப்பு, நவீன வசதிகொண்ட பாரதி முன்பள்ளி, இவ்வாறான பல வேலைத்திட்டங்கள்
நிறைவடைந்த ஓர் சிறந்த நிறைவான காலமாகும். இவ்வேலத்திட்டங்கள் தன்னலமற்ற, சுயநலம் பாராட்டாது
கல்விகற்கும் மாணவர்களின் நலன் கருதி செய்து முடிக்கப்பட்ட திட்டங்களாகும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், விளையாட்டு ,கலைத்துறைகளும்
வெளிக்கொண்டுவரப்பட்ட மகிழ்ச்சியான காலமாகும்.
எமது கிராமத்தின் மீதும், எமது கல்லூரியின் மீதும் பற்றுக்கொண்ட சிறந்த உள்ளங்கள்
தமது வேலைப்பளுவிற்கு மத்தியிலும், பல தடங்கல்களுக்கு மத்தியிலும் ,இரவுபகல் பாராது
அயராது உழைத்து வருவது எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சியை மேலோங்க வைத்துள்ளது.
இவ்வாறான சிறந்த உள்ளங்களை உளமாரப் பாராட்ட வேண்டியது எமது சுழிபுரம் வாழ் மக்களினது
கடமையாகும்.
எமது கல்லூரியின் அதிபர் திரு. வ . ஸ்ரீகாந்தன் அவர்கள், EDC அமைப்பின் செயலாளர் DR. கண்ணதாசன், பாரதி முன் பள்ளியின்
தலைவர் திரு. து.ரவீந்திரன், நாவலர் முன்பள்ளியின் தலைவர் திரு .நிரஞ்சன், திரு சிவரூபன், திரு தவராசா போன்றவர்கள்
2013 ஆம் ஆண்டின் சிறந்த நற்சேவையாளர்களாக
மதிக்கப்படுகின்றார்கள். இவர்களின் பணி மேன்மேலும் தொடர நாம் யாவரும் தொடர்ந்தும் முடிந்த
ஒத்துழைப்பை வழங்குவோம் .
இவர்களின் சேவையைப்பாராட்டி அனைத்து விக்ரோறியன்களாகிய பழைய மாணவர்கள், யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரும் இவ்வாண்டின்
இறுதியில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்
.
நன்றி
எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Subscribe to:
Comments (Atom)