Friday, 3 January 2014

எமது கல்லூரியின் வளர்ச்சியினையும் ஊட்டப்பாட சாலைகளின் முன்னேற்றத்தையும் தடுக்காதீர்கள்.

சுழிபுரம் வாழ் மக்களே ,எமது இனம் கடந்த காலங்களில் பல இன்னல்களையும் பல இழப்புக்களையும் அனுபவித்த நிலையில் எமது மாணவர்களின் கல்வித்தரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு சீர்செய்து மீண்டும் எமது சமுதாயத்தை படித்த சமுதாயமாக எப்படிக் கொண்டுவருவது. என்பது பலரது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த அடிப்படையில் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியம் கல்லூரியில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வித்திறமைகளையும், விளையாட்டுத் திறமைகளையும் கல்லூரி நிர்வாகத்தின் ஊடாக தெரிந்து கொண்ட நிலையில் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு சமூகமளிக்காது வேலைக்குச் செல்வது ,கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை ,சிறந்த பெறுபேறுகளை பெறுவவைத்திலை ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபாடில்லை.இப்படி பல பிரச்சனைகளை அறிந்த நிலையில் எமது ஒன்றியம் இப்பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும். எமது கல்லூரியில் அக்கறை கொண்ட சிலரின் உதவியுடன் எமது கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் ஆரம்பக்கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்து தெரிந்தெடுத்தல் வேண்டும். என்ற நிலை ஏற்பட்டது.
ஐந்தாம் தரப்பரீட்சையில் தோற்றும் ஊட்டப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் யாவரும் சிறந்த பேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கும் தேர்வு செயப்பட வேண்டும். இந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தின் புள்ளிகள் அடிப்படையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த கல்லூரி  நிர்வாகத்தின் முடிவை எமது ஒன்றியம் முற்று முழுதாக ஆமோத்தித்தது.
ஏனெனில் ஊட்டப்பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் கடின  முயற்சி எடுத்தப் படித்தல் வேண்டும் .பெற்றோர் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் ,மாணவர்கள் ஒழுங்ககாகப் பாடசாலைக்கு சென்று படித்தல் வேண்டும் ,ஊட்டப்பாடசாளைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய அளவு அக்கறையை மாணவர்கள் மீது செலுத்த வேண்டும் ,இவ்வாறான பல தீர்வுகளுக்கு மத்தியில் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலையின் கல்வியை முடிந்த அளவு வளர்ப்பதற்காகவும், மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் ,கல்வி அபிவிருத்திக் குழு ஒன்றை நியமித்து அதன் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஊட்டப்பாடசாலைகளுக்கு செய்து வருகின்றோம்.
அடுத்த சில வருடங்களில் ஊட்டப்பாடசாலை மாணவர்கள் எல்லோரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அந்த அடிப்படையில் எமது ஒன்றியம் சில வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டோம். எமது வேலைத்திட்டங்களை ,எமது கல்லூரியின் வளர்ச்சியை ,மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் சில புத்திஜீவிகள் எமது கல்லூரிக்கு எதிராக பிரச்சனைகளைத் தூண்டி விடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் .இப்பிரச்சனையை கொண்டுவருபவர்கள் எத்தனைபேர் எமது கல்லூரியில் கற்று பட்டம் பெற்றவர்கள் .இவர்களுக்கு எப்படி எமது கிராமத்தின் மீது திடீரென அக்கறை ஏற்பட்டது .இவர்கள் எமது கல்லூரிக்கோ ,அல்லது ஊட்டப்பாடசாலைகளுக்கோ எந்த வகையில் நன்மை செய்தார்கள் .என்றுமே இல்லை .இவர்களின் திட்டம் எமது கல்லூரியின் வளர்ச்சியை தடுப்பது ,எமது கிராமத்தின் வளர்ச்சியை தடுப்பதுமே ஆகும் .
யாழ் மாவட்டத்தில் பல பாடசாலைகள் உதாரணமாக ,யாழ் இந்துக்கல்லூரி ,கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்வார்கள். எமது கல்லூரி மாத்திரம் இதற்கு விதிவிலக்கா? எமது கிராமத்தின் வளர்ச்சிகும்  ,கல்லூரியின் வளர்சிக்கும் இடையூறு ஏற்படாது பாதுகாப்பது விக்ரோறியன்கள் யாவரினதும் கடமையாகும் .
எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலைகலில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புகளுக்கு செய்துவரும் உதவிகளை தடுத்து நிறுத்தும் முயற்ச்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் .
                                நன்றி
தாமோதரம்பிள்ளை – கமலநாதன் ,
காரியதரசி ,
விக்ரோறியாக்கல்லூரி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .