Wednesday, 1 January 2014

அர்த்தம்முள்ள கட்டுரை - மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள்.

இக்கட்டுரை அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் அல்ல, பொது சேவையில் ஈடுபட்டதாக கூறும் சில எம்மூர்
 தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
எழுதியவர்
தர்மபுரம் நந்தன் 


NEED CHANGE  



change
மலர்ந்துள்ள இப்புத்தாண்டு இந்த நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற ஆண்டாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கின்ற ஆண்டாகவும் அமையவேண்டும் என இறைவனைப் பிரர்ந்திப்பதுடன் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த உலகில் மற்றமில்லாதது மாற்றம் ஒன்றே என்ற என்கின்ற அறிஞர்களின் தத்துவத்திற்கமைய எமது தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியைத் தோற்றுவிக்க அனைவரது மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.
அந்தவகையில் வடக்கில் கடந்த 30 வருடப்போர், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் இந்த நாட்டில் வழுகின்ற அரசியல் வாதிகளின் மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு கடமையாற்றுகின்ற அரசாங்க அதிகாரிகளில் பல மாற்றங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது இருப்பதுடன் தமது அதிகாரங்களுக்கு மேலாக செயற்படுவதனால் ஒழுக்கவியல் கேட்பாடுகளும் சமூக நடத்தைகளும் புறழ்வடைந்துள்ளன.
அரசாங்க அதிகாரிகள் தமக்குக் கிழ் கடமையாற்றுகின்றவர்களிடமும் சாதாரண மக்களிடமும் தமது சேவைக்குப் பாலியல் இலஞ்சம் கோருவதால் வடக்கில் ஒழுக்கமும் சமூக நன்நடைத்தைகளும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய விடயங்களாக்கப்பட்டுள்ளன.
உயரதிகாரிகளில் பலர் இலஞ்ச ஊழலுக்குப் பெயர்போனவர்களாக மறியுள்ளதால் நேர்மையான அதிகரிகளும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நெறிகெட்ட சமூகம் வழ்ததற்கான தடயங்களைவிட அழிந்ததற்கான வராலாறுகளே அதிகமாக எழுதப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்காக உழைக்க வேண்டிய பல அரசாங்க அதிகாரிகள் கண்ணிருந்தும் குருடர்களாக மறியிருப்பது எம்மவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
வடக்கின் நிர்வாக அலகுகளைத் திட்டமிட்டு வழிபடுத்துகின்ற உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தகுதி குறைந்தவர்களுக்கு உயர்பதவிகளை வழங்குதல், தமது அரசியலுக்காக குற்றவாளிகளைத் தண்டனைகளிலிருந்து காப்பாற்றுதல், தாமும் குற்றங்களுக்கு உடந்தையாளர்களாக மாறுதல், மக்கள் நலச் சேவைகளை முன்னிலைப்படுத்தி சேவையாற்றாமை, செத்துச்சேர்க்கும் நோக்குடன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டுவருவதால் சமூகத்தில் ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தைப் பாதகாக்க வேண்டிய சட்டப் பாதுகாவலர்களும் ஒழுக்கமில்லாத அரச அதிகாரிகளுக்கு பாதுகாப்பினை வழங்குவது மேலும் மேலும் குற்றத்தை அதிகரித்துள்ளது.
மலருகின்ற இந்தப் புத்தாண்டிலிருந்து எம்மவர்கள் மத்தியில் மற்றத்தைக் கொண்டுவந்து எமது மக்களின் நிம்மதியான வாழ்வினை உறுதிசெய்ய வேண்டுமாயின் அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதிகாரிகள் மாறவேண்டும்.
மாற்றமில்லாத மாற்றங்களின் ஊடாக அதிகாரிகளின் மனங்களில் மற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக எம்மை நாமே வலுப்படுத்தி அழிவடைந்து செல்லுகின்ற எமது கலை, கலாசார, பாரம்பரிய, பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
எனவே மலருகின்ற இந்தப் புத்தாண்டு அதிகாரிகளின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாய் அமையவேண்டும். அல்லது அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்.

ஆதாரம்  Tamil Press