Tuesday, 31 July 2012

மாபெரும் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி

எதிர் வரும் 04.08.2012 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும்,பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.இப்போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றிபெற கல்லூரிப் பழைய மாணவர்கள்,சுழிபுரம் வாழ் மக்கள் எல்லோரையும் ஒத்துழைப்பையும் ,ஆர்வத்தையும் வழங்கும்படி யுகே பழைய மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது . இத்துடுப்பாட்ட போட்டியையும் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 20,000 ரூபாயை நன்கொடையாக கொடுப்பதற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர் திரு .ஆனந்தகுமார் (a.k )அவர்கள் முன்வந்துள்ளார் . எமது கல்லூரி வெற்றி பெற யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது .எமது கல்லூரி அணி வெற்றி பெற புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைத்து பழைய மாணவர்களும் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆர்வம் கொடுக்கவும் .
நன்றி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
31/07/2012

Monday, 23 July 2012

Appreciation by local News paper Valamburii

See Article 1
See Article 2

இரசாயனவியல் கட்டுரைப் போட்டி

 
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட இரசாயனவியல் கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் யா/விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் இருவர் ஆங்கில மொழி மூலம் இப்போட்டிக்குத் தோற்றியவர்களாவர். செல்வி. கார்த்திகா இந்திரகுமாரன் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
செல்வி. காருண்யா ஸ்ரீகிருஷ்ணராஜா தேசிய ரீதியில் ஏழாம் இடத்தைப் பெற்று திறமைச் சித்தியை அடைந்துள்ளார். வடமாகாணத்தில் இம்மாணவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர தமிழ்மொழி மூலம் இப்போட்டிக்குத் தோற்றியவர்களில் விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. நிரோசனா ஸ்ரீரங்கன் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தைப் பெற்று திறமைச்சித்தியை அடைந்துள்ளார். இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

Saturday, 21 July 2012

Friday, 20 July 2012

All island inter-school chemistry essay competition 2012-Victoria winners

The students who has won in All island inter-school chemistry essay competition 2012:
English medium: Ms.Karthika Indirakumaran - 3rd Place (Bronze)
Ms.Karunya Sriskantharajah - 7th Place (Merit)
Tamil medium: Ms.Niroshana Srirankan - 5th Place (Merit)
The awarding ceremony to be held at 2.00 p.m. on 27th July 2012 at SLAAS auditorium, Vidya Mawatha, Colombo 7.
We wish those students and Ms.K.Tharany (Teacher In Charge).

Thursday, 19 July 2012

Sureshkumar's Visit

Victorian T.Sureshkumar and family visited to school from Canada.
See Photos

Handing over-Cricket Materials

ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த திரு.அ.தயாபரன் அங்குள்ள பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட துடுப்பாட்ட உபகரணங்களை கல்லூரிக்கு உபகரித்த போது...

Tuesday, 17 July 2012

Blood Donation Camp

இன்று (17.07.2012) எமது கல்லூரியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 34 மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இரத்த தானம் செய்தனர். வைத்தியசாலையின் வைத்திய தேவைகளுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் இரத்தத்தினை வழங்கியவர்களை இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி மனமுவந்து பாராட்டினார். இவ் இரத்த தான முகாமை கல்லூரியின் உயர்தர மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
 

Under 15 Cricket Team

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. யாழ்ப்பாணக் கல்லூரியுடனான விக்ரோறியாக் கல்லூரி பங்கு கொண்ட போட்டியில் 131 ஓட்டங்களால் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற விக்ரோறியாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது. 43 பந்துப் பரிமாற்றங்களில் 174 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளும் இழக்கப்பட்டன. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பில் பி.ஐங்கரன் 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் கே.பிரசாத் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் சி.கிருபாலன் 29 ஓட்டங்களை 7 இலக்குகளை வீழ்த்தினார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 14 பந்துப் பரிமாற்றங்களில் 43 ஓட்டங்களை மட்டும் பெற்று சகல இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பில் பி.ஐங்கரன் 11 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார். 131 ஓட்டங்களால் விக்ரோறியாக் கல்லூரி அணி இலகுவான வெற்றியைப் பெற்றது.

Thayaparan's Visit

Victorian A.Thayaparan has visited to our school from UK.
See Photos

Thursday, 12 July 2012

இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களின் பிரியாவிடை நிகழ்வு‏

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள்.
See Photos

Wednesday, 11 July 2012

மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான சின்னத்தை வழங்கும் நிகழ்ச்சிக்கு  விக்ரோறியாக் கல்லூரியில் 1989 ஆம் ஆண்டுகளில் கல்விகற்ற பழைய மாணவரான நோர்வேயை வசிப்பிடமாகக் கொண்ட திரு .செல்வக்குமார் ,திருமதி .சுமதி-செல்வக்குமார் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர் .அதற்கான படக்காட்சி தரப்பட்டுள்ளது .

Monday, 9 July 2012

National champions were honoured

Our brave boys who secured the National championship in Hand ball at National level were honoured by the school community.The teachers who involved in this historic event was also honoured at this occasion.
 

ஆங்கில தின விழா

See Photos

Sunday, 8 July 2012

Our U15 Cricket Team won against Maanipay Hindu

விக்ரோறியாக் கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்போருக்கான சிநேகபூர்வமான துடுப்பாட்டப்போட்டியில் விக்ரோறியாக் கல்லுரி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயக் சுழற்சியில் வெற்றி பெற்ற விக்ரோறியாக் கல்லூரி அணி 41 பந்துப் பரிமாற்றங்களில் 179 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தது. இதில் சி.றஜிதன் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றார். மானி்ப்பாய் இந்துவின் ம.தினேஸ்குமார் 43 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 36 பந்துப் பரிமாற்றங்களில் 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ச.சஜீத் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களைப் பெற்றார். விக்ரோறியாக் கல்லூரி சார்பில் கு.பிரசாத் 34 ஓட்டங்களைக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
 

Friday, 6 July 2012

முத்தமிழ் விழா - 2012‏

இயல், இசை, நாடகம், ஆகியமுத்தமிழும் கமழ முத்தமிழ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது . சுழலும் சொற்போர்,கர்நாடக இசை,பரதநாட்டியம் ,மயில்நடனம் ,நாடகம் ஆகியநிகழ்ச்சிகள் நடைபெற்றன .

Victoria College National Champions

SriLanka Inter schools Hand ball tournament - Victoria College National champions

"Hand ball" team got a glorious victory and became the National Champion.
Our boys fought against the DS Senanayakka Vidyalaya. Altogether 48 schools participated in this national completion.  Jaffna College, Jaffna central college and the Victoria college were the selected schools from the Jaffna district.

Monday, 2 July 2012

EDC donating Photocopier on behalf of OSA (UK)

Ms Thenmozhi, the Treasurer JVC, OSA, UK is handing over a photocopier to J/Ikkiyasanga Saiva Viththiyaasaalai, Chulipuram.
At this Occasion, committee members of EDC (Educational Development Committee), addressed the gathering
See Videos

Sunday, 1 July 2012

Our treasurer visited our school

Our treasurer, Ms Thenmozhi, visited our school on the 29th of June 2012 to find out the current situation at the school. She spent more than 2 hours there, and discussed matters with the principal. Moreover, she is planning to hand over the photocopier to the J/ Ikkiyasanga Saiva Viththiyaasaalai, the major feeding school of the J/ Victoria College, on 2nd July 2012 as per OSA-UK’s request.