சுழிபுரம் விக்ரோரியக்கல்லூரியின் மாணவர்கள் கல்வியிலும்,விளையாட்டிலும் பல சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகிறார்கள்.இச்சாதனைகள் எமது கல்லூரி தவிர்ந்த மாவட்ட மட்டத்திலும்,மாகாணமட்டத்திலும்,தேசியமட்டத்திலும்,எமது மாணவர்களின் வெற்றிகளுக்கும்,சாதனைகளுக்கும் எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்களாவர்.
இவ்வாறு எமது மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் சென்று தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கல்லூரிக்கு ஒரு சொந்த பஸ் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.இந்தச் சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகம் எமது மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்காக வாடகை பஸ்களை அமர்த்தி அதற்கு ஒரு வருடத்தில் பல இலட்ச ரூபாக்களை செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.இதனைக் கருத்தில் கொண்டு கனடாப் பழைய மாணவர் ஒன்றியம் ஒரு வருடத்திற்கு இதற்குரிய செலவினங்களை தாம் பொறுப்பாக ஏற்று ஆரம்பமாக ஒருலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவை (1,25000) கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்திருப்பது எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய விடையமாகும்.
இத்தகைய வேலைத்திட்டத்திற்காக புலம்பெயர்ந்து வாழும் அனைத்து
விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்களும் கனடாப் பழைய மாணவர் ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என யுகே பழையமாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.