விக்ரோறியாக் கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்தினர் திருக்கார்த்திகை விளக்கீட்டினை சிறப்பாகக் கொண்டாடினார்கள். கல்லூரியில் வீற்றிருக்கும் சிவகாமி சமேத நடேச பெருமானுக்கும் விசேட பூசைகள் நடைபெற்ற பின்னர், கல்லூரி வளாகம் முழுவதும் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டது.
Friday, 30 November 2012
Wednesday, 28 November 2012
EDC Scholarship
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், எமது விக்ரோறியாக் கல்லூரிக்கும் ஊட்டப் பாடசாலையான ஐக்கிய சங்க வித்தியாசாலையில் கல்விகற்கும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வரும் மாணவர்களில் தலா 10 பேர்களைத் தெரிவு செய்து அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஊக்குவிப்பு நிதியினை கொடுக்க முன்வந்துள்ளார்கள் .
இந்த ஊக்குவிப்பு நிதிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை E.D.C அமைப்பினர்கள் சில விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள் .உதாரணமாக ,அடிப்படை வசதி குறைந்த ,மற்றும் குடும்ப வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் மாணவராக இருத்தல் வேண்டும் .
இந்த நிதியை தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தங்கள் கல்விவளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்தல் வேண்டும் .இந்த ஊக்குவிப்பு நிதி முதல் கட்டமாக அடுத்த மாதம் முதல் மாதாந்த அடிப்படையில் கொடுக்க E.d.C அமைப்பாளர்கள் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளார்கள் .
விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அடுத்த வருடத்தில் இருந்து மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்வதற்கு திடடமிட்டுளார்கள்.அதன் ஆரம்பக் கட்டமாக மாணவர் கல்வி ஊக்குவிப்பு நிதியினை கொடுக்க முன்வந்துள்ளார்கள் .இந்த சிறந்த வேலைத்திட்டத்தினால் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் .
இந்த ஊக்குவிப்பு நிதியத்தில் நீங்களும் சேர விரும்பினால் மாதம் குறைந்தது 5 pounds கொடுத்து உங்களால் ஒரு மாணவனுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுங்கள் ."தானங்களில் கல்வியும் ஓர் சிறந்த தானமே "
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
Monday, 26 November 2012
மரண அறிவித்தல்-கலாபூசணம் நடேசன் சிவசண்முக மூர்த்தி
சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும்,
தொல்புரம் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் சிவசண் முகமூர்த்தி (ஓய்வுபெற்ற
ஆசிரிய ஆலோசகர் வலிகாமம் வலயம்) நேற்று (25.11.2012) ஞாயிற்றுக்கிழமை
காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசன்
வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை
தம்பதியரின் மருமகனும், திருமதி லோகாம்பிகையின் அன்புக் கணவரும், சிவகௌரி
(பரிசோதகர் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை), சிவரஞ்ஜனி (ஆசிரியர்
யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) சிவசங்கரன் (ஜனசக்தி காப்புறுதி) ஆகியோரின்
பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான குருபரன், பரமேஸ்வரன், அன்னபூரணம் மற்றும்
தெய்வநாயகி, மால்மருக மூர்த்தி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற
கமலாம்பிகை, ஞானாம்பிகை, ராதாகிருஸ்ணன் மற்றும் பால கிருஸ்ணன் ஆகியோரின்
மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று
(25.11.2012) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் திருவடி நிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
_____________________________________________________________________________________________
விக்ரோறியாக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்கள் இன்று (25/11/2012) அதிகாலை 1.00 மணியளவில் இறைபதமடைந்தார். சமயபாட ஆசிரியரான இவர், சமய பிரசங்கங்கள் செய்வதில் வல்லவர். மேலும், குரல்வளம் மிக்க இவர், நாட்டார் பாடல்கள் பாடுவதில் தன்னிகர் இல்லாதவர். பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமயமும் பாடசாலையின் புகழும் பரவ உதவியவர். அன்னாரின் உற்றார், உறவினர், நண்பர்களின் துயரில் பங்குகொள்வதொடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, விக்ரோறியாக்கல்லூரியின் யூ.கே பழைய மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
_____________________________________________________________________________________________
விக்ரோறியாக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்கள் இன்று (25/11/2012) அதிகாலை 1.00 மணியளவில் இறைபதமடைந்தார். சமயபாட ஆசிரியரான இவர், சமய பிரசங்கங்கள் செய்வதில் வல்லவர். மேலும், குரல்வளம் மிக்க இவர், நாட்டார் பாடல்கள் பாடுவதில் தன்னிகர் இல்லாதவர். பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமயமும் பாடசாலையின் புகழும் பரவ உதவியவர். அன்னாரின் உற்றார், உறவினர், நண்பர்களின் துயரில் பங்குகொள்வதொடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, விக்ரோறியாக்கல்லூரியின் யூ.கே பழைய மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Saturday, 24 November 2012
மரம் நடுகை செயற்றிட்டம்
எமது கல்லூரியில் தேசிய மரம் நடுகை தினத்தை
முன்னிட்டு “பசுமை உலகிற்குப் பங்குதாரராவோம்” என்ற கருப் பொருளிலான மரம் நாட்டும்
நிகழ்வினை சுற்றாடல், சூழல் பாதுகாப்புப் படையணினரின் ஏற்பாட்டில் பல்வேறு பயன்தரு
மரங்கள் நாட்டப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் இந்நிகழ்வில்
கலந்து சிறப்பித்தார்கள். அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து
மரங்களை நாட்டினார்கள்.
See Photos
See Photos
Friday, 23 November 2012
தென்னங்கன்று விநியோகம்
யா/விக்ரோறியாக் கல்லூரியி்ல் தரம் 6 வகுப்பில்
கல்வி கற்கும் 156 மாணவர்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
குறுகிய காலத்தில் பயன்தரும் இத்தென்னங்கன்றுகள் தெங்கு அபிவிருத்திச் சபையின்
அனுசரணையுடன் வழங்கப்பட்டபோது மாணவர்களின் பெற்றோர்கள் பெற்றுச் சென்றனர்.
Thursday, 22 November 2012
Mental Health Day Function - 2012
“விரும்பத்தக்க மனிதராய் நம்மை நாமே
செதுக்குவோம்” என்ற தொனிப் பொருளில் உளவள நாள் (Mental Health Day) நிகழ்வுகள் எமது
கல்லூரியில் நடைபெற்றபோது விக்ரோறியன் திரு.ச.கைலாசநாதன் (Deputy Director of
Education, Valikamam Education Zone) அவர்கள் பிரதம விருந்தினராகக் கல்ந்து
கொண்டார்கள்.
இந்நாளில் பலதரப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களிடையே கற்பனையாற்றலைத் தூண்டும் வகையில் சித்திரம் வரைதல், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான தியானம் மற்றும் யோகாசனம், மேடை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் போன்றவை இடம்பெற்றன. இவற்றினூடாக மாணவர்களின் மனநிலை ஒருமுகப்படுத்தப்பட்டதுடன் மனப்பாங்கு மாற்றங்களும் ஏற்பட்டன.
இந்நாளில் பலதரப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களிடையே கற்பனையாற்றலைத் தூண்டும் வகையில் சித்திரம் வரைதல், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான தியானம் மற்றும் யோகாசனம், மேடை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் போன்றவை இடம்பெற்றன. இவற்றினூடாக மாணவர்களின் மனநிலை ஒருமுகப்படுத்தப்பட்டதுடன் மனப்பாங்கு மாற்றங்களும் ஏற்பட்டன.
Wednesday, 21 November 2012
Under - 14 Football team is selected to District level competition - 2012
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில்
நடைபெற்ற வருடாந்த உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின்
14வயதிற்குட்பட்ட அணிவீரர்கள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பழை Union
College, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி போன்றவற்றை வெற்றிகொண்ட போதும் இளவாலை
புனித கென்றியரசர் கல்லூரியை வெற்றி கொள்ளமுடியாமையால் மூன்றாமிடத்தை பெற்றுக்
கொண்டனர். இதன்மூலம் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்ட
பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் 14வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான சுற்றுப்
போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 10 வருடங்களுக்குப்பின்னர் மாவட்ட
மட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு எமது கல்லூரி அணி ஒன்று தெரிவு
செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Saturday, 17 November 2012
Art Exhibition 2012
சென்ற வாரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஓவிய
மன்றம் நடாத்திய “ஓவியச் சாளரம்” கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள்...
Earlier News Published on 10/11/2012
Earlier News Published on 10/11/2012
விக்ரோறியாக் கல்லூரியின் சித்திர ஆசிரியரும்
மாணவர்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரக் கண்காட்சியான “ஓவிய சாளரம்”
இன்று யா/யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக கல்வியியற்
கல்லூரி விரிவுரையாளர் திருமதி.பெப்சி மரியதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக
வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு
கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
500க்கும் அதிகமான பல்வேறு வகையான கண்கவரும்
சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சித்திரம்சார் கைவேலைப்
பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல நூற்றுக்கணக்கானவர்கள்
இக்கண்காட்சியைக் கண்டுகழித்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமையும் இது
தொடரும்.
அரசாங்கக் கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நன்கொடை
எமது விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ
.ஸ்ரீகாந்தன் அவர்களின் அயராத உழைப்பினால் எமது கல்லூரிக்கு அரசாங்கத்தின் கல்வி
அமைச்சு 85 இலட்சம் ரூபா பெறுமதியான விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குத் தேவையான உபகரணங்களை
வழங்கி உள்ளது .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Friday, 16 November 2012
நடன நிகழ்வு - ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி
வட மாகாண சபையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த “ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளிலான என்ற
கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் விருந்தினர்களை
வரவேற்பதற்கான வரவேற்பு நடன நிகழ்வொன்றை நடாத்தி அனைவரது பாராட்டுதல்களையும்
பெற்றுள்ளனர். கலந்து கொண்ட மாணவர்களின் புகைப்படம்
இணைக்கப்பட்டுள்ளது.
See Photos
See Photos
Thursday, 15 November 2012
Science Practical - G.C.E. O/L students.
இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப்
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் தொடர்பான செய்முறைகளை
விளக்கும் நோக்கமாக விக்ரோறியாக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான மாணவமன்ற மாணவர்களும்
ஆசிரியர்களும் இணைந்து விஞ்ஞான செய்முறைப் பட்டறையொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் விக்ரோறியாக் கல்லூரி க.பொ.த சாதாரண தர மாணவர்களும் மெய்கண்டான்
மகாவித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, சுழிபுரம் வடக்கு ஆறுமுகம்
வித்தியாசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை போன்ற பாடசாலை மாணவர்களும் கலந்து
கொண்டு பயன்பெற்றார்கள். பரீட்சை நோக்கில் விஞ்ஞான பாடம் தொடர்பான பல்வேறு
எதிர்பார்க்கை வினாக்களை முன்னிறுத்தி இச்செய்முறைப் பட்டறை
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
Tuesday, 13 November 2012
Happy Deepawali
It Is Time To Feel
Good,
Time for Reunion,
Time To Share Happiness,
Time To Feel Being Loved,
Time To Show Ur Love,
Time To Live For Others Time To Contribute for your CommunityAnd
Time To Wish For Peace.HAPPY DIWALI.
Time for Reunion,
Time To Share Happiness,
Time To Feel Being Loved,
Time To Show Ur Love,
Time To Live For Others Time To Contribute for your CommunityAnd
Time To Wish For Peace.HAPPY DIWALI.
Monday, 12 November 2012
Sunday, 11 November 2012
Environmental Club
விக்ரோறியாக் கல்லூரியின் சுற்றாடல் சூழல்
பாதுகாப்பு படையணியினரின் சின்னஞ்சூட்டும் விழா சென்ற வெள்ளிக் கிழமை கல்லூரி
மண்டபத்தில் நடைபெற்றது. இப்படையணியில் 25 இளம்சிறார்கள் சின்னஞ்சூட்டப்பட்டு
சத்தியப்பிரமாணம் செய்து புதிதாக இணைந்து கொண்டனர். இப்படையணி பாடசாலையின்
சுற்றாடல் சூழலையும் தாம் வாழும் இடங்களின் சுற்றாடல் சூழலையும் சுகாதார
நிலைக்கேற்ப பேணி பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இலங்கையின் மத்திய சுற்றாடல்
அதிகார சபையினால் உருவாக்கப்பட்ட சூழல்பாதுகாப்புப் படையணி சிறப்பாக செயற்படும்போது
இதன் அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி உறுதிப்படுத்தப்படும். இப்படையணி உள்ள
பாடசாலைகள் வருடாந்தம் “சிறந்த ஆரோக்கியமான சுற்றாடலைக் கொண்ட பாடசாலை” என்ற விருது
வழங்கும் திட்டத்திற்குள் இணைக்கப்படுகின்றன.
See Photos
See Photos
Friday, 9 November 2012
Ridgeway Hall Projet Update
As you are all aware our EDC members are carrying out the hall refurbishment. Work is progressing at an astonishing rate. The hall internal floor tiling project is completed. The contractors have started laying the terrasso on the veranda. The next step is to refurbish the stage area. This work is expected to start soon.
Thursday, 8 November 2012
கட்டுரைப்போட்டியில் வெற்றி
சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் மாணவி
காயத்திரி -தேவசுதன் அவர்கள் அஞ்சல் தினக் கட்டுரைப்போட்டியில் அகில இலங்கை
ரீதியில் இரண்டு தேசிய மட்டப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று எமது கல்லூரிக்கு
வரலாற்றில் ஒரு அரிய சாதனையை நிலைநாட்டி தந்துள்ளார் . .இவரின் இச்சாதனை மூலம் எமது
கல்லூரி தேசிய ரீதியில் பெருமையை பெறுகின்றது .
கல்லூரி மாணவி காயத்திரி -தேவசுதன் அவர்களுக்கு அதிபர்
,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மற்றும் பழைய மாணவர்களும் ,அத்துடன் யுகே பழைய மாணவர்
ஒன்றியமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Monday, 5 November 2012
Great Contributions for the studies
தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் எமது
கல்லூரியின் பழைய மாணவர்கள் 2014 August மாதம் G.C.E.A/L பரீட்சைக்குத் தோற்றும்
மாணவர்களுக்கு மாதாந்தம் அவர்களுக்கேற்படும் கற்றலுக்கான செலவீனத்தை ஈடுசெய்வதற்கான
உன்னதமான உதவியை வழங்க முன்வந்துள்ளனர். October மாதத்திற்கான இவ்வுதவித் தொகை
இன்று (05-11-2012) காலைப்பிரார்த்தனை நிகழ்வின்போது வழங்கி
ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்
திரு.பா.விஜயகுமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திருமதி.சி.புனிதவதி
மற்றும் பழைய மாணவி திருமதி.க.விஜயலட்சுமி ஆகியோர் வருகைதந்து மாணவர்களுக்கு உதவித்
தொகையை வழங்கிவைத்தார்கள்.
கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் வீடுகளை கையளித்துள்ளனர்.
போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த
1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல், கீரிமலை, வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான
கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப்
பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உயர்
பாதுகாப்பு வலயங்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம்
பொன்னாலை, மாதகல் மேற்கு ஆகிய பிரிவுகளில் உள்ள பாதுகாப்பு வலயங்களில் குடியமர
கடற்படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதனையடுத்து, இன்று பொன்னாலை வரதராஜபெருமாள்
கோயிலைச் சூழவுள்ள பகுதியில் மக்களின் வீடுகளை அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
இன்று காலை இடம்பெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்காக் கடற்படையின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் வீடுகளைக் கையளித்துள்ளனர்.
See Photos
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்காக் கடற்படையின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் வீடுகளைக் கையளித்துள்ளனர்.
See Photos
Subscribe to:
Posts (Atom)