எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 136 வருடங்கள் ஆகிவிட்டஇக் காலப்பகுதியில் எத்தனை இலட்சம் மாணவர்கள் தமது கல்லூரிப்படிப்பை முடித்து வெளியேறி இருப்பார்கள் இவர்கள் கல்விகற்ற காலப்பகுதியில் எமது கல்லூரிக்கு அனைத்து சுகாதார வசத்திகளும் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்று இல்லாதிருந்தது அசௌகரியமாகவே இருந்திருக்கும் .இந்த நிலையை ஈடுசெய்யும் வகையில் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்காக யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்துள்ளது .
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் முன்னைய நிர்வாக சபையின் பொருளாளர் திரு .மனோகரன் அவர்கள் .ஐப்பசி மாதம் 2011 ஆம் ஆண்டு எமது கல்லூரிக்கு சென்றிருந்த போது கல்லூரி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எமது கல்லூரிக்கு ஓர் சிற்றுண்டிச்சாலை தேவை என்பதை விடுத்துள்ளார்கள் .கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு .மனோகரன் அவர்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில் இக் கோரிக்கையை முன்வைத்தார் .
இக்கூட்டத்தின் தலைவர் திரு .உலகநாதன் அவர்கள் செயலாளர் திரு .ஜெயச்சந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு எடுத்தார்கள் .
அப்போது தமது நிர்வாகத்தின் கையிருப்பில் இருந்த பணத்தை சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு உரிய செலவிற்கு பயன்படுத்துவதற்காக தீர்மானம் எடுத்தார்கள். இத்தகவலை செயலாளர் திரு .ஜெயச்சந்திரன் அவர்கள் கல்லூரி அதிபருடன் 03/03/2012 அன்று தொடர்பு கொண்டு நிர்வாகத்தின் முடிவைத்தெரிவித்தார் .
அதன் பின்னர் யுகே ஒன்றியத்தின் பொதுக்கூட்டத்தில் ( 10/03/2012 அன்று) புதிய நிர்வாகம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது .
பழைய நிர்வாகத்தின் சிற்றுண்டிச்சாலை கட்டும் திட்டத்தைபுதிய நிர்வாகம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவு எடுத்தது .கையிருப்பில் இருக்கும் பணத்தைக்கொண்டு சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு முடிவெடுத்த வேளையில் பணம் போதாத காரணத்தினால் நிர்வாக சபை உறுப்பினரான திரு .ரவிசங்கர் அவர்கள் யுகேயில் வசித்துவரும் நிறுவக முகாமையாளர் செல்லப்பா முதலியார் குடும்பத்துடன் தொடர்புகொண்டு அவர்களையும் இத்திட்டத்திற்கு உள்வாங்கிக்கொண்டு அவர்களின் உதவியுடன் இச் சிற்றுண்டிச்சாலை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்த சிற்றுண்டிச்சாலை கட்டும்திட்டத்தை ஆரம்பித்து வைத்த எமது முன்னைய நிர்வாகசபை தலைவர், காரியதரிசி, பொருளாளர் மற்றும் செயல்குழு உறுப்பினர்களின் கனவு இப்போது நனவாகிக் கொண்டு உள்ளது. இவர்களுக்கு கல்லுரி சமூகம் தனது மனமுவந்த நன்றியை தெருவித்துக்கொள்ளுகிறது .
இத்திட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய முன்வந்துள்ளனர் . இத்திட்டத்திற்கு யாராயினும் உதவி செய்ய விரும்பினால் யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும் .
நன்றி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .