Monday, 4 February 2013

குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்

பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரை அண்மித்த பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாடசாலை சிற்றூழியரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து அவசர அவசரமாக பாடசாலைகள் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
யாழ்.நகரை அண்டிய மற்றும் குடாநாட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களைப் பெற்றோர்கள் உரியமுறையில் பாதுகாப்பாகப் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்போது மாணவர்களை பாடசாலைக்கு மிகவும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவது பெற்றோர்களின் கடமை. பாடசாலை முடிவடைந்ததும் உடனடியாக மாணவர்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கற்றல் நடவடிக்கையின் பின் மாணவர்கள் தேவையற்ற விதத்தில் வீதியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மாணவிகள் தங்க ஆபரணத்திற்குப் பதிலாக "கவரிங்' ஆபரணங்களை அணிய வேண்டும் என்றும் சில பாடசாலைகளில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.       
குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.