செல்லத்துரை & விஸ்வலிங்கம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்
எமது கல்லூரியின் புகழ் பூத்த ஆங்கில ஆசான்களான திருமதி. செல்லத்துரை , திருமதி.விஸ்வலிங்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக , கல்லூரி NECORD கட்டடத்தில் அமைத்துள்ள ஆங்கில அறையின் ஓர் பகுதியில் ஆங்கில நூல் நிலையம் , ஆஸ்திரேலியா பழைய மாணவர் சங்கம் , ஐக்கியஇராச்சியத்தில் வதியும் பழைய மாணவன் திரு.சி.ரவிசங்கர் ஆகியோரின் அனுசரணையுடன் 28 July 2016 காலை 9:00 மணிக்கு திறந்து வைக்கப்பெறவுள்ளது .கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் விருந்தினர்களாக கடந்த அதிபர் பிரம்மஸ்ரீ வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் 1971 முதல் 1987 வரையில் எமது கல்லூரியில் சேவையாற்றி ஓய்வு பெற்ற திருமதி.செல்லத்துரை அவர்களின் வழித்தோன்றல்களும், 1968 முதல் 1989 வரை சேவையாற்றி ஓய்வு. பெற்ற. திருமதி.விசுவலிங்ம் அவர்களின். வழித்தோன்றல்களும் முன்னாள் ஆங்கில ஆசான் திருமதி..செல்வராணி தேவராஜா அவர்களும். கலந்து சிறப்பிக்கவுள்ளனர் அறிமுக உரையினை ஆசிரியர் திவ்யலோஜினி கதிர்காமநாதன் அவர்களும், .நன்றி நவிலலினை பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் திரு.பா.பாஸ்கரன் அவர்களும் நிகழ்த்துவார். நூலக பொறுப்பாசிரியராக திருமதி .வான்மதி சத்தியலோகநாதன் ஆசிரியர் கடமையாற்றுவார். நூலகத்திற்கு வேண்டிய ஆங்கில நூல்களை ஐக்கிய இராச்சியம்திரு.ச.வினோதன் திரு சி,ரவிசங்கர் திரு,த உலகநாதன் ,திரு..தா.கமலநாதன் ஆகியோரும் ஆஸ்திரேலியா பழையமாணவர் சங்கத்தினரும் ,, ஆசான்களின் குடும்பத்தினரும் அன்பளித்துள்ளனர்.