தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகக்
கொண்டவரும் விக்டோரியா கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவருமான
கலாநிதி. எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு
பெருமை தேடித் தந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவர்,
யாழ் மருத்துவ பீ டத்திலே உயிர் இரசாயனவில பிரிவில் விரிவுரையாளராக்க்
கடமையாற்றியவர்.
தனது கலாநிதிக் கற்கை நெறியினை சுவீடன்
மற்றும் சுவிஸ்லாந்தில் மேற்கொண இவர் தனது புதிய கண்டு பிடிப்பின் மூலம்
உலகளாவிய ரீதியில் பேசப்படவர்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் இவர் மேலும் ஒரு கௌரவத்தை பெற்றுள்ளார்.
பாடசாலை மீது மாறாத அன்பும் அக்கறையும் கொண்ட இவர், தற்போது அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து செயற் படுவதோடு கடந்த காலங்களில் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Read More