Saturday, 8 June 2013

'Ridge Way Hall' புனரமைப்பின் சிறப்பறிக்கை .


நூற்றிமுப்பத்திஏழு  வருடங்கள் பழமைவாய்ந்த எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் 'Ridge Way' மண்டபம் கல்லூரி மாணவர்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாது இருந்த நிலையில் எமது கல்லூரி அதிபர் திரு . .ஸ்ரீகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் பணம்  1521466.50 ரூபா செலவில் நவீன மண்டபமாக புனரமைக்கப்பட்டு தற்போது மாணவர்களின் பாவனைக்கு பயன்படுகின்றது .
இச்சிறந்த வேலைத்திட்டத்திற்கு கல்லூரி நிர்வாகம் , SDS அமைப்பாளர்கள் ,EDC அமைப்பினர், DR.கண்ணதாசன் மற்றும் திரு .து .இரவீந்திரன் ஆகியோர் இரவுபகல் பாராது தங்களது வேலைப்பளுவின் மத்தியிலும் இந்த வேலைத்திட்டத்தை 100 நாட்களில் செய்து முடித்துத்தந்ததற்காக யுகே பழைய மாணவர் ஒன்றியம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது .

அத்துடன் இந்தப் புனரமைப்பு யுகேயில் வசித்துவரும் சில அங்கத்தவர்கள் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக நிதி அன்பளிப்பு செய்து இந்த வேலைத்திட்டத்தை சிறந்த  முறையில் செய்து முடிக்க உதவியதற்கு அங்கத்தவர்களுக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது .

மேலும் இப்புனரமைப்பிற்காக இரவுபகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டும்  ,பின்னர் தனது சொந்தச்செலவில் இவ் வேலைத்திட்டத்தை நேரில் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டு அயராது உழைத்த யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் தன்னலம் கருதாத உறுப்பினரான திரு .சி .ரவிசங்கர் அவர்களுக்கு எமது யுகே ஒன்றிய நிர்வாகம் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது .

'நல்லன செய்வோருக்கு நாமும் தோள்கொடுப்போம் '

நன்றி ,

தாமோதரம்பிள்ளை -கமலநாதன் ,
காரியதரசி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

See Principal's Thanking Letter 

See SDS's Account Statement