Monday, 10 June 2013

School Development Society Annual General Meeting 2013

எமது கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு கல்லூரியின் சகலதுறை அபிவிருத்திக்கும் தமது முழுமையான சம்மதத்தைத் தெரிவித்தனர். மண்டபம் நிறைந்து இருக்கை இடமின்றி மண்டபத்துக்கு வெளியேயும் திரண்டுநின்றனர். அதிபர் தனது உரையில் கல்வித்துறை சார் வளர்ச்சி, இணைப்பாடவிதானத் துறை சார் வளர்ச்சி, பௌதிக வளத்துறைசார் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். இவ்வாறான வளர்ச்சிகளில் அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்புக்களுக்கும் பழைய மாணவர்கள் வழங்கி வரும் பங்களிப்புக்களுக்கும் அதிபர் நன்றி தெரிவித்தார்.
புதிய நிர்வாக சபையில் அதிபர் தலைவராகவும் திரு.பா.விஜயகுமார் செயலாளராகவும் திரு.து.ரவீந்திரன் உபசெயலாளராகவும் திரு.செ.சிவகுமாரன் பொருளாளராகவும் ஒருமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். 15 பேர் கொண்ட நிர்வாக சபை அமைக்கப்பட்டது.