Monday, 30 September 2013
Sunday, 29 September 2013
Victoria College Founders Day & Annual Prize Giving
Yesterday, the Victoria College Founders Day & Annual Prize giving was held. The event was very successful and the number of parents and students that attended the event far exceeded the event organisors expectations.
The prize day book was released yesterday. Please watch this space. We will publish the electronic version of the book very soon.
See Photos
Wednesday, 25 September 2013
English Day Celebrations - 2013
Annual English day celebration - 2013 of our college English union was held
today. Victorian Dr.K.Kamalanathan invited as chief guest and our former
principal Mrs.A.Veluppillai invited as Special guest. But unfortunately
Mrs.A.Velluppillai was unable to participate in this occasion.
Our Students actively participated in this event. They staged speeches,
solo acting, poems, drama and etc. English Union president Miss.V.Chamini
presided the celebration. Mrs.S.Thevarajah (Kunju Teacher),who retired from her
21 years service with our school, guided the students for the events. She is
also one of our old students. The students who won in School level English day
competitions were also honored with certificates.
Tuesday, 24 September 2013
Monday, 23 September 2013
சிறுகதைப் போட்டி
நோர்வே முத்தமிழ் கலா மன்றம் தனது 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய
ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் எமது கல்லூரி தரம் 10 மாணவன் ஐங்கரன் 5ஆம்
இடத்தைப் பெற்றுள்ளார். நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய இப் போட்டியில்
ஐங்கரன் பெற்ற வெற்றியை கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான
திரு.சக்திவேல் அவர்கள் நேரில் வந்து கௌரவித்தார். திரு.திருமதி.சக்திவேல் இருவரும்
மாணவனுக்குப் பரிசு வழங்கி மகிழ்ந்தனர். அத்துடன் இம்மாணவனை வழிப்படுத்திய ஆசிரியை
செல்வி.ஜெயமலர் அவர்களையும் சந்தித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொண்டனர்.
Wednesday, 11 September 2013
Visit to our School - Mr.V.Kantharuban
கல்லூரியின் பழையமாணவன் திரு.வ.காந்தரூபன் அவர்கள் கனடாவிலிருந்து எமது கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளின் வளர்ச்சி தொடர்பாக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார். கல்லூரியை சுற்றிப் பார்வையிட்ட அவர் பழைய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களையும் பார்வையிட்டார். கனடா பழையமாணவர் சங்க அனுசரணையில் மேற்கொள்ளப்படும் மைதான விஸ்தரிப்பு மற்றும் றிஜ்வே மண்டப புனரமைப்பு, உள்ளக வீதிகளின் புனரமைப்பு, புதிய கணனிக்கூடம், புதிய தேநீர்ச்சாலைக் கட்டிடம் போன்ற பல அபிவிருத்திகளையும் அத்துடன் கல்வி தொடர்பான முன்னேற்றங்களையும் பார்வையிட்டார். கெக்கிராவைக்குச் செல்லவுள்ள துடுப்பாட்டக்குழுவின் செலவுகளுக்காக 15,000/- அன்பளிப்பினையும் வழங்கினார்.
Thursday, 5 September 2013
Prefects' Batch Installation and OSA-UK Mr Tharmalingam's Visit
நேற்று கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த திரு.செ. தர்மலிங்கம் அவர்களும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. செல்வராணி தேவராஜா அவர்களும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதல்வர் சின்னங்களை அணிவித்தார்கள்.
மாணவமுதல்வர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து திரு.செ.தர்மலிங்கம் அவர்கள் உரையாற்றினார்கள். வெளிநாடுகளில் வாழும் கல்லூரிப் பழைய மாணவர்கள் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர் எனவும் மாணவர்கள் அதனைப் பயன்படுத்தி தம்மை கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் தான் எதிர்பார்க்காத நிலையில் இவ்விழாவில் கலந்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பெரும்பேறாகக் கருதுவதாகவும் கூறி மாணவர்களுக்கு தனது ஆசிகளையும் கல்லூரியின் உயர்வுக்கு உழைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
See More Photos
See More Photos
Wednesday, 4 September 2013
துடுப்பாட்டப் போட்டியில் மீண்டும் மாபெரும் வெற்றி
Sri Lanka Cricket
Association ஆல் இன்று சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும், மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும்
இடையில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓட்டங்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் நாணய மாற்றுச் சுழற்ச்சியின் மூலம் மானிப்பாய்
இந்துக்கல்லூரி முதலில் துடுப்பாட்டக் களத்தில் இறங்கியது. மானிப்பாய் இந்துக்கல்லூரி
சகல விக்கட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சார்பில் திலக்சன், 68 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
விக்ரோறியாக் கல்லூரியின் பந்து வீச்சில் வி. கஜன் 37 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளையும், கோகுலராஜ் 11 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து துடுப்பாட்டக் களத்தில் இறங்கிய விக்ரோறியாக் கல்லூரி 35.1 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுள்ளனர். விக்ரோறியாக் கல்லூரியின் சார்பில் அணித்தலைவர் K. பிரதீப் 48 ,ஓட்டங்களையும் k.பிரசாந்த் 37 ,ஓட்டங்களையும் பெற்றதன் மூலமாக
விக்ரோறியாக் கல்லூரி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இவ் வெற்றியின் மூலம் விக்ரோறியாக் கல்லூரி
தென்பகுதியில் கெக்கராவ மத்திய கல்லூரியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது. இப் போட்டி
எதிர்வரும் 07.09.2013 அன்று கெக்கராவ மத்திய கல்லூரி
மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மானிப்பாய் இந்துக்கல்லூரியுடன் விளையாடி வெற்றி பெற்ற அனைத்து சுழிபுரம் விரோறியாக்கல்லூரி
வீரர்களுக்கும் ,பயிற்சியாளர்களுக்கும் அதிபர்
ஸ்ரீகாந்தன் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர்
ஒன்றியம் அனைவரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
Tuesday, 3 September 2013
வரலாற்றில் முதல் தடவையாக தோற்பந்து துடுப்பாட்டத்தில் வெற்றி
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் தென்பகுதியிலுள்ள பாடசாலைகளுடன் தோற்பந்து துடுப்பாட்டத்தில் ஈடுபடக் கூடியதான வெற்றிகளை எமது கல்லூரியின் 17 வயது துடுப்பாட்ட அணி பெற்றுள்ளது.
மானிப்பாய் இந்துக் கல்லூரியை (தேசிய பாடசாலை) வெற்றி கொண்டதன் மூலம் கெக்கிராவை மத்திய கல்லூரியுடன் அடுத்த துடுப்பாட்டம் வெள்ளிக்கிழமை கெக்கிராவையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தின் திரு.ஆனந்தகுமார் சென்ற மாதம் இங்கு வருகை தந்து இவ்வீரர்களுக்கு வலுவான பயிற்சி வழங்கியிருந்தார். ஐக்கிய இராச்சியம் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் திரு.மனோகரன் ஆறு சப்பாத்துகளும் பந்துகளும் கொள்வனவு செய்ய 20000/= வழங்கியுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய மாணவர்களின் பெரும் உதவியும் பழைய மாணவர்களான திரு.தவராஜா, திரு.சிவரூபன் அவர்களின் தொடர்ச்சியான பயிற்சிகளும் பொறுப்பாசிரியர்களான திரு.மதிதரன், திரு.கண்ணதாசன் ஆகியோரின் அர்ப்பணிப்பும் இவ்வெற்றிகளுக்கு காரணமாகும். மிகவும் செலவு கொண்டதான இந்தத் தொடரில் வீரர்கள் மேலும் முன்னேற பழைய மாணவர்களின் உதவிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
Victoria Vs Manipay Hindu : Victorian's Amazing Victory
Victoria college
won Manipay Hindu College (National School) in Un 17 Cricket tournament which
was organized by Sri Lanka Cricket Association.
Manipay Hindu won the toss
and decided to bat first. They all out for 165 runs. In the batting record of
them N.Dilakshan got 68 runs. In the bowling of Victoria, V.Kajan got 5 wickets
for 37 runs and Kokulraj got 2 for 11 runs.
In the second batting
Victoria College, they reached 167 runs for 5 wickets in 35.1 overs. Captain
B.Pratheesh got 48* runs and K.Prashanth got 37 runs.
Victoria College beat
Manipay Hindu by 5 wickets and qualified for the next stage.
The next match will be held
on Friday (07.09.2013) at Kekirawa Central College grounds with Kekirawa Central
College.
Monday, 2 September 2013
துடுப்பாட்டத்தில் சிறப்பான வெற்றி
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும் ,யாழ்ப்பாண
இந்துக்கல்லூரிகும் இடையில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஐம்பது(50 )ஓவர்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி எண்பத்தியொரு (81) ஓவர்களை வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய விக்ரோறியாக் கல்லூரி ஐம்பது (50) ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
விக்ரோறியாக் கல்லூரியின் அணியில் வை.கஜன் 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் பா.பிரதீப் 49 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பின் துடுப்பாட்டத்தில்
இறங்கிய யாழ்ப்பாண இந்துக்கல்லூரி வீரர்கள் ஒரு ஓவரில் 4.88 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களத்தில் இறங்கியது. விக்ரோறியாக் கல்லூரியின்
திறமையான பந்து வீச்சால் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி சகல விக்கட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. விக்ரோறியாக் கல்லூரியின் சார்பில் சகல துறை ஆட்டக்காரரான
வை.கஜன் 3 விக்கட்டுகளையும், மா.குகசாந்தன் 3 விக்கட்டுகளையும் பெற்றதன் மூலம் விக்ரோறியாக்கல்லூரி 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இலங்கையில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி சிறந்த துடுப்பாட்ட
அணியாகும் இக் கல்லூரியை வெற்றி கொள்வது என்பது ஒரு சாதாரண விடையமல்ல அதிலும் இந்துக்கல்லூரி
தேசிய மட்டப்பாடசாலையாகும். எமது விக்ரோறியாக்கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் பல
தலைசிறந்த கல்லூரிகளுடன் விளையாடி பல வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து ஒரு தலைசிறந்த அணியாக
கொண்டுவருவதற்கு கல்லூரி அதிபர் திரு.ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் ,பயிற்சியாளர் திரு.சிவரூபன்
அவர்களுக்கும், வெற்றியை ஈட்டித்தந்த அனைத்து துடுப்பாட்ட வீரர்களுக்கும்,
பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மற்றும் பழைய மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்
ஒன்றியம் அனைவரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
இது போன்ற வெற்றிச்சிறப்பை அடைவதற்கு வெளிநாடுகளில்
வசித்துவரும் பழைய மாணவர்கள் எல்லோரும் நிறைந்த ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பது யாவரினதும்
எதிர்பார்ப்பு .
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை வென்றது விக்டோரியா
யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியுடன் எமது கல்லூரி பங்குகொண்ட சிநேகபூர்வமான துடுப்பாட்டப்போட்டியொன்றில்
எமது கல்லூரி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய
விக்ரோறியாக் கல்லூரி 244 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. வை.கஜன் 50
ஓட்டங்களையும் அணித் தலைவர் பா.பிரதீஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை)
163 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. வை.கஜன் 03 இலக்குகளையும்
மா.குகசாந்தன் 03 இலக்குகளையும் வீழ்த்தினர்.
Subscribe to:
Posts (Atom)