Friday, 7 February 2014

OSA-UK encouraging Vinothan and His Batch Mates Seminar

06.02.2013 அன்று சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் சிவபாதசுந்தரனார் மண்டபத்தில் காலை   10:00  மணியளவில் வர்த்தக மாணவர்களுக்கான கருத்தரங்கு விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
வர்த்தகத்துறை கருத்தரங்கில் அயல் பாடசாலைகளான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ,வட்டு இந்துக்கல்லூரி ,பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் மற்றும் எமது கல்லூரி மாணவர்கள் மொத்தமாக 90 வர்த்தகத்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர் .
முதலில் வர்த்தகமும் ,முகாமைத்துவமும் என்ற தலைப்பில் திரு . நந்தீஷ்வரன் (ஸ்கந்தா ஆரம்பப்பாடசாலை அதிபர் )அவர்கள் தற்கால நடைமுறை விடையங்கள் மற்றும் பரீட்சை சம்பந்தமான பல விடையங்கள் .ஆராயப்பட்ட பின் முடிவில் வினா ,விடை தாள்கள் கொடுக்கப்பட்டன .
பின்னர் மதியம்  12:00 மணியளவில் இடைவேளை விடப்பட்டது .இடைவேளையின் பின்னர் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .கே .வினோதன் அவர்கள் வெளிநாட்டின் உயர்கல்வியும் ,ஆங்கிலமும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் .
அதன் பின் விரிவுரையாளர் திரு .ஜெயரூபன் அவர்கள் பொருளியல் அறிமுகம் என்ற தலைப்பில் மாணவர்களின் எதிர்கால நன்மை கருதியும் ,தொழில் வாய்ப்பு சம்பந்தமாகவும் பல விடையங்கள் ஆராயப்பட்டன .கருத்தரங்கின் முடிவில் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டன .இம்முதல் நாள் கருத்தரங்கு இனிதே நிறைவுபெற்றது .மீண்டும் நாளை இரண்டாவது நாளாக பல விடையங்கள் ஆராயப்படவுள்ளன.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர் திரு .கே .வினோதன் அவர்களுக்கு எமது ஒன்றியம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது .இத்தகைய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை  எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் கல்லூரிக்கு தொடர்ந்தும் செய்துவரும் .
                     நன்றி

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See More Photos