Tuesday, 13 December 2016

இன்று கார்த்திகை விளக்கீடு - 13 Dec 2016



இன்று திருக்கார்த்திகை விளக்கீடு இந்துக்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பெற்றது. விக்ரோரியாக் கல்லூரியின் கனகரத்தினம் கட்டடத் தொகுதியின் மேற் தளத்தில் தீபங்கள் ஏற்றபெற்று அலங்கரிக்கப் பெற்றிருந்தது .    

Friday, 9 December 2016

சண்முகம் துரைராஜா - கண்ணீர்ப் பூக்கள்


துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு -திரு க விநோதன்


விக்டோரியன் திரு கந்தசாமி விநோதன் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து எமது கல்லூரி 13 வயதின் கீழ் பிரிவு துடுப்பாட்ட அணியினருக்கான உபகரண தொகுதியினை அன்பளிப்பு செய்துள்ளார்.அவரின் சார்பில் முன்னாள் பிரதி அதிபர் திரு.செ .சிவகுமாரன் அவர்கள் உபகாரணத் தொகுதியை கையளித்தார். 
         முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ வ .ஸ்ரீகாந்தன் அவர்களும் திரு.ந.சிவரூபன் அவர்களும் இணைப்பு பணிகளை புரிந்தனர் . 



கனகரத்தினம் முதலியார் வழித்தோன்றல் திரு.சிவானந்தன் -வருகை



கனகரத்தினம் முதலியார் வழித்தோன்றல் திரு.சிவானந்தன் அவர்களும்  அவர் தம் குடும்பத்தினரும் 8 Dec 2016 ஆகிய இன்று பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர் . இவர்களின் வருகையின் போது  உப-அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களும் முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.