பாரதி கலை மன்றம் 24-05-1982 இல் உதயமாகி, கவி பாரதி கொண்ட எழுச்சி நடையுடன் பவனிவந்த 35வது ஆண்டு நிறைவை , விழாவாக்க மகிழ்வுடன் தயாராகி வருகின்றது. புலம் பெயர் பாரதி சமூகத்தினரின் நல்வரவுடனும்- அவர்களின் பங்கேற்புகளுடனான கலைப்படைப்புகளுடனும் நிகழ்வுகள் மெருகேற்றப்படவுள்ளன.
புத்தம் புதிய கலைகள்- பஞ்ச
பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
எனும் பாரதியின் ஆதங்கத்தைப் போக்க மேற்குலக புலம்பெயர் உறவுகளின் கலை மேன்மைகளை நாமும் உள்ளீர்த்து புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளது அரங்கம்.
நாகலிங்கம் சுப்பையா அவர்கள் நினைவாக அவர்கள் வழித்தோன்றல்களால் நிர்மாணிக்கப்பெற்று 24-05-2014 அன்று கையளிக்கப்பெற்ற "சுப்பையா அரங்கு" அவரது வழித்தோன்றல்களால் மீள்வர்ணம் பூசப்பெற்று மெருகூட்டப்பட்டு வருகின்றது.
5/08/2017, 6/08/2017 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள், புலம் பெயர் உறவுகளின் வருகைக்காக விழா விரிவாக்கம் கண்டுள்ளது. கலை மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள்- மன்ற இசை பயிற்சி வகுப்பு மாணவர்கள் - மன்ற நடன பயிற்சி வகுப்பு மாணவர்கள் - பாரதி முன்பள்ளி சிறார்கள்- மன்ற உறுப்பினர்கள்-விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் - பொன்னாலை சந்திர பரத கலாலயத்தினர்-பாரதி சமூக புலம் பெயர் உறவுகள்-எமது கிராமத்தவர்கள் என பலரதும் கலைப் படைப்புகள் அரங்கம் காண உள்ளன.