Wednesday, 13 March 2013

Principal's 59th Birthday

எமது கல்லூரி முதல்வர் அவர்களின் ஐம்பத்தியொன்பதாவது பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். முதல்வர் எமது கல்லூரிக்கு கடமைக்கு வந்த இரண்டரை வருடங்களில் சகலதுறை வளர்ச்சியையும் கல்லூரி பெற மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்துள்ளார். அவரது காலத்தில் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணி செய்ய எமக்குக் கிடைத்த வாய்ப்பையிட்டு நாம் மிக மகிழ்வடைகின்றோம். ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது செயற்பாடுகளுக்கு
பூரணமான ஒத்துழைப்பை வழங்கி எமது மாணவர்கள் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் மேலும் உயரபாடுபடுகின்றோம். ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் அதிபரின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார்கள்.

ஆசிரியர் நலன் புரிக்கழகம்>
யா/விக்றோரியாக் கல்லூரி.