விக்ரோறியாக் கல்லூரியின் 100 வருடத்திற்கு மேலான "Ridge Way Hall" யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு இன்று 05.12.2012 திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது .இந்தக் கோலாகலமான திறப்பு விழா அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெற்றது .
இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் போசகருமான திரு த. .உலகநாதன் அவர்களும் ,எமது ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் கல்லூரி வேலைத்திட்டங்களின் பொறுப்பாளருமாகிய திரு .சி. இரவிசங்கர் அவர்களும் ,மற்றும் முன்னைநாள் அதிபர்கள் திரு .கா. சந்திரபாலன் ,திருமதி .அ வேலுப்பிள்ளை ,மற்றும் கல்லூரி சமூக அங்கத்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் .
இவ்விழாவில் கலந்து கொண்ட எல்லாப் பிரதிநிதிகளும் கௌரவமாக அழைத்து வரப்பபட்டு ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட "Ridge Way Hall" திரு .உலகநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி .சாம்பசிவம் -தேன்மொழி அவர்களால் அன்பளிப்பாக
வழங்கப்பட்ட மின் வழங்கியினைக் கல்லூரிப் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்
திரு வி..உமாபதி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார் .அதன் பின் சிற்றுண்டிச்
சாலை கட்டுவதற்காக விழாவில் கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்களால் அடிக்கல்
நாட்டப்பட்டது .
விழாவின் ஆரம்பத்தில் தலைவர் ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறந்த தலைமை உரை வழங்கியுள்ளார். .அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர்களும் தற்போதைய அதிபரும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். திரு .உலகநாதன் மற்றும் திரு .இரவிசங்கர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து
கல்லூரி மாணவ முதல்வியும் திரு து ரவீந்திரன் அவர்களும் நன்றியுரை
வழங்கினர். .நல்லதோர் நடன நிகழ்வைத்தொடர்ந்து சிறந்த மதியபோசனம் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது .
நன்றி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
See Photos
See Videos
More photos and videos coming soon, please visit this site again.
See Photos
See Videos
More photos and videos coming soon, please visit this site again.