06.12.2012 இன்று மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.கணேசதாசன்
தலைமையில் வித்தியாசாலைப்பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
.இப்பரிசளிப்பு விழாவிற்கு இருதயச் சத்திரசிகிச்சை நிபுணர் DR.ஞானமூர்த்தி
-காந்திஜி அவர்களும் ,திருமதி .கிருசாந்தி -காந்திஜி அவர்களும் பிரதம
விருந்தினராக கலந்து கொண்டனர் .சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிபர் திரு
.கா .சந்திரசேகரன் ,சங்கானை கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வி .அ.ச
.மரியாம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர் .
இப்பரிசளிப்பு விழா
வழக்கம்பரை அம்மன் கோவிலில் இருந்து மாணவர்கள் ,மக்கள் சகிதம் ஊர்வலமாக
வந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது .செல்வி .சி .செவ்வந்தி
அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார் .மருத்துவ பௌதீகவியலாளர் அ .ராசலிங்கம்
நிறுவனர் நினைவுப் பேருரை நடாத்தினார் .சிவஸ்ரீ சுந்தரராசக் குருக்கள்
அருள் ஆசியுரை வழங்கினார் .மற்றும் சிறந்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஒயிலாட்டம்
,சிறுவர் நாடகம் ,நாட்டுக்கூத்துடன் மாணவர்களுக்கான பரிசுகள் DR.
கிருசாந்தி -காந்திஜி அவர்களால் வழங்கப்பட்டது .நன்றியுரை திரு .வை
.குகதாசன் அவர்கள் கூறினார் .
இப்பரிசளிப்பு விழாவிற்கு
விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் வ. ஸ்ரீகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் ,EDC
அமைப்பாளர்கள் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின்
உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்
.இவ்விழாவின் போது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்
மெய்கண்டான் மகாவித்தியாலயத்திற்கு இரண்டு கணனிகள் அன்பளிப்புச் செய்வதற்கு
முன்வந்துள்ளனர் .இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .