Sunday, 28 June 2015

உயர்தரப் பரீட்சை இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்

உயர்தரப் பரீட்சை இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்: பரீட்சைகள் திணைக்களம்
கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் உடனடியாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு அரசாங்கம் புதிய ஆட்சி செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பரீட்சையை பிற்போடாமல் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதலாவது கட்டமாக ஓகஸ்ட் 4ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையும் இரண்டாவது கட்டமாக ஓகஸ்ட் 24 ஆம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 8ஆம் திகதிவரையும் பரீட்சையை நடத்துவதென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 புலமை பரிசில் பரீட்சை August 23

Thursday, 25 June 2015

சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகர் தேவஸ்தான.தீர்த்த திருவிழா புகைப்படங்கள்

See More Photos

சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகர் தேவஸ்தான.தேர்த் திருவிழா.புகைபடங்கள்

சுழிபுரம் – பறாளாய் அருமிகு ஈஸ்வர விநாயகர் மஹோற்ச பெருவிழா 13.06.2015 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி, 23.06.2015 அன்று தேர்த்திருவிழாவும், 24.06.2015 தீர்த்தத் திருவிழாவும் நிகழ இறையருள் கூடியுள்ளது.

See More Photos

மரண அறிவித்தல்-திரு வைரமுத்து உருத்திரன்

(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர்- விக்டோறியாக் கல்லூரி யாழ்ப்பாணம், சங்கீதபூஷணம், கலாபூஷணம்)
பிறப்பு : 9 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 22 யூன் 2015


யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் வழக்கம்பரையை வசிப்பிடமாவும் கொண்ட வைரமுத்து உருத்திரன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லதாங்கி, அனுஷா, தேவசேனா, சங்கீதா, இராஜாராம், காலஞ்சென்ற கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிரேசம்பிள்ளை, காலஞ்சென்ற ரோகினிஅம்மா, நடராசா, காலஞ்சென்ற தியாகராசா, தங்கச்சியம்மா, குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், திருமூர்த்தி, சுபாஸ்கரன், சசிகரன், ராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுருநாதர், சின்னம்மா, செல்வநேசம், சிவயோகம், பரமேஸ்வரி, கதிரவேலு கற்பகம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா, அஸ்மிதா, ராயினி, கௌசிகன், அபிநயா, கஜனிதா, அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரன் லதாங்கி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447832213856
சுபாஸ்கரன் தேவசேனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447799767837
சசிகரன் சங்கீதா — கனடா
செல்லிடப்பேசி:+16472025027
உருத்திரன் இராஜாராம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605948219

Saturday, 20 June 2015

ஜனாதிபதி சாரணர் விருது

எமது கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனும் சிரேஸ்ட மாணவ முதல்வனுமாகிய செல்வன்.இ.நிரோஜன், ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெற்றுள்ளார். கடந்த மூன்று தசாப்தத்தின் பின் இவ் விருதினை எமது கல்லூரி மாணவன் பெற்றுள்ளமை சிறப்புக்குரியதாகும். இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் திரு.க.அருணாசலம் அவர்கள் அதிபராகவும் திரு.குணரத்தினம் அவர்கள் சாரணப் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றிய காலத்தில் திரு.சி.சீனிவாசகம் அவர்கள் ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெற்றதன் பின் செல்வன்.இ.நிரோஜன் அவர்கள் பிரதி அதிபரும் சாரணப் பொறுப்பாசிரியருமான திரு.செ..சிவகுமாரன் அவர்களின் வழிப்படுத்தலில் இவ் விருதினை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கல்லூரியின் தலைமைச் சாரணனாகச் செயற்படும் நிரோஜன் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் முன்னிலையில் உள்ளவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
See More Photos

தகவல் : திரு ஸ்ரீ காந்தன் (முன்னாள் அதிபர் )

சின்னம் சூட்டல்‏

விக்ரோறியாக் கல்லூரியின் இளம் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (18/06/2015) நடைபெற்றது. பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சாரணப் பொறுப்பாசிரியர் திரு.சி.நிரஞ்சதுர்க்கன் அவர்கள் சாரண மாணவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.
கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் மற்றும் பிரதி அதிபர்களான திரு.ஈஸ்வரன், திருமதி.இ.தவநாயகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல் : திரு ஸ்ரீ காந்தன் (முன்னாள் அதிபர் )

Thursday, 18 June 2015

JVC-OSA (UK) AGM 2015

 
தகவல் : S.Rajan (OSA-UK President) 
 

Monday, 15 June 2015

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 14-06-2015, ஞாயிறு மு.ப 9:45  மணியளவில் கல்லூரி றிட்ஜ்வே மண்டபத்தில் ஆரம்பமாகியது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 37% அளவிலான பெற்றோரே கலந்துகொண்டனர்.

பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
தகவல் : து. இரவீந்திரன்

விக்ரோறியா கல்லூரி அணிகள் வடமாகாண சம்பியன்களாக

 விக்ரோறியா கல்லூரி அணிகள் வடமாகாண சம்பியன்களாக தெரிவாகியுள்ளனர்  19 வயதிற்குட்பட்ட பெண்கள் துடுப்பாட்ட சம்பியனாகவும்  17 வயதிற்குட்பட்ட பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினர் வடமாகாண சம்பியனாகவும் வலைப் பந்த  19 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட ஆண் கள் அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்ற்க்கொண்டனர். இவ் அணியினர்க்கான  கௌர விப்பு நகழ்வு 08.06.2015 அன்று கல்லூரியில் நடைபெற்றது. 

அதிபர் திருமதி  ச.சிவகுமார்  தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் விளையாட்டு வீரரும் பழைய மாணவரும் பிரான்ஸ் நாட்டு வர்த்தக பிரமுகருமான திரு சுப்பையா வரதராஜா அவர்களுடன் அவர்தம் பாரியார் அவர்களும் - அவரின் சகோதரனாகிய சு. தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 
 கல்லூரி அலுவலக முன்றலில் வீரர்கள் விருந்தினர்க்கு அறிமுகம் செய்யப்பட்டதனை தொடர்ந்து மாண வர்கள் அணிவகுத்து நிற்க விருந்தினர்களும் வீர வீராங்க னைகளும் றிட்ஜ்வே மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 
மேடையில் வாழ்த்துரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து வெற்றி அணியினருக்கு விருந்தினர் திரு. சு. வரதராஜா அவர்களால் 53000 ரூபா பணப்பரிசிலும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. வெற்றிபெற்ற அணயினருக்கான கேடயங்களை முன்னாள் அதிபர் திரு. வ. ஸ்ரீகாநதன் அவர்கள் வழங்கினார். 
நிகழ்விற்கான விருந்தினர் வரவழைப்பிற்கான ஒழுங்குகளை முன்னாள் பிரதி அதிபர் திரு. க. இந்திரராஜா அவர்களும், முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவர் எந்திரி வி. உமாபதி அவர்களும் மேற்கொண்டி ருந்தனர். அமரர் சுப்பையா குடும்பத்தினர் சார்பில் பிற்புற மதில் நிர்மாணிப்பின்போதும் 300,000 ரூபா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 






தகவல் : து. இரவீந்திரன்









Monday, 8 June 2015

Wednesday, 3 June 2015

மரண அறிவித்தல் - திருமதி சாந்தகுமாரி சிவானந்தன் (ராசாத்தி)

மண்ணில் : 23 யூன் 1953 — விண்ணில் : 28 மே 2015
யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், லண்டன் Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி சிவானந்தன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராமநாதன், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தன், ஜெயந்தன், மீனாட்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாதன்(லண்டன்), காலஞ்சென்ற ரவீந்திரநாதன், நகுலகுமாரி(சுவிஸ்), ஜெயக்குமாரி(கனடா), கமலகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம், செல்வராணி(யாழ்ப்பாணம்), சிவராசா(யாழ்ப்பாணம்), பத்மா(லண்டன்), தங்கரத்தினம்(கனடா), செல்வராம்(சுவிஸ்), ஜெயக்குமார்(கனடா), நடேசலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/06/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: The Co-operative Funeralcare, 100 Brighton Road, Purley, Surrey CR8,4DA, United Kingdom. 

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/06/2015, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Oshwal Hall, 1 Campbell Rd Croydon, Greater London CR0 2SQ United Kingdom.
தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/06/2015, 10:45 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Streatham Park Cemetery, Rowan Road, Streatham, London SW16 5JF, United Kingdom
தொடர்புகளுக்கு

நகுலகுமாரி செல்வராம் — பிரித்தானியா
தொலைபேசி:+442086840219
குருபரன் காசிலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447985532782


சுழிபுரம் காட்டுப்புலம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது‏

வலி மேற்கு பிரதேசத்தில் வேள் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள்
திறக்கப்பட்டது.இவற்றின் போது அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ்
 நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின் போது சம்பத் வங்கி குறித்த நூலக பயன்
 பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர்இ இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து
 கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள்
 உரையாற்றும் போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும்
 நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர்
 அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது.
இதே வேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலை எல்லோரும்
 இனைந்து உயர்த்துவதறகு முயற்சிக்க வேண்டும். இனறைய நவீன கற்றல் முறைகள் மற்றும்
 கற்பித்தல் முறைக்கு ஊடாக இவ் நூலகங்களின் பயன் பாட்டினை அதிகரிக்க நவடிக்கை
 மேற்கொள்ளப்படவேண்டும் இதே வெளை இவ் நூலகங்களுக்கு உள்ள வாசகர் வட்டத்தினை
 மேலும் விரிவடைச் செய்து அதன் வாயிலாக போட்டிகளை ஏற்படுத்தி மணவர்களின்
 ஈடுபாட்டை அதிகரிப்பதறகு முயற்சிக்க வேண்டும். இவ் செயற்பாடுகள் தனித்த ஒருவரால்
 அன்றி ஒரு சமூகமாக இணைந்து மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும். இவ்
 நிலையிலேயே மாற்றஙகள் ஏற்படும்.இந்த நாட்டில இரு இனங்களுக்கிடையே நடந்த
 அழிவாயுத யுத்தம் நிறைவுக்கு வநததன் பின்னர் தற்போது அறிவாயுத யுத்தம
 ஆரம்பிக்கப்பட்டுள்ளது இவ் யுத்தத்தில் நாம் வெற்றிபெற்றவர்களாக வேண்டுமாயின் எமது
 சிறார்களின் அறிவு நிலையினை உயர்த்தவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
சிறுவர்களைச் சுற்றி கல்விக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆரம்ப கல்வி மிக
 முக்கியமான நிலையில் உள்ளது இவ் நிலையில் மகிழ்வான ஒர் கல்விச் சூழல் பேணப்பட
 வேண்டும். எனக குறிப்பிட்டார்.

தகவல் : திரு செந்தில் நாதன் (மெல்போர்ன்)