உயர்தரப் பரீட்சை இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்: பரீட்சைகள் திணைக்களம்
கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் உடனடியாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு அரசாங்கம் புதிய ஆட்சி செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பரீட்சையை பிற்போடாமல் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதலாவது கட்டமாக ஓகஸ்ட் 4ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையும் இரண்டாவது கட்டமாக ஓகஸ்ட் 24 ஆம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 8ஆம் திகதிவரையும் பரீட்சையை நடத்துவதென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமை பரிசில் பரீட்சை August 23