Monday, 12 October 2015

நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கத்திறன் போட்டியில் விக்ரோரியாக் கல்லூரிக்கு முதலிடம்

    இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு மரபு வழி சாராத வகையில் நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கத்திறன் போட்டியில் கல்லூரி உயிரியல் ஆசிரியர் திரு.    .சிவஞானம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பங்குபற்றிய 2017 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் வலய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டனர்.

Tuesday, 6 October 2015

ஆசிரியர் தினம் - 2015


ஆசிரியர் தினம் 6 Oct 2015 அன்று காலை 9:45 மணியளவில் ஆரம்பமானது. ஆசிரியர்களும் விருந்தினர்களும் அலுவலக முன்றலில் இருந்து நிகழ்விடமான ரிட்ஜ்வே மண்டபம் வரையில் அணியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.


பழயை மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் எந்திரி வி.உமாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை திரு.ச.தவராஜா அவர்கள் நிகழ்த்தினார்.


 சேவை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு  ஆசிரிய கழகத்தினால் வழங்கப்பட்டது.


நினைவுப்பரிசாக மாமரக் கன்றுகள் ஆசிரியர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தினரால் வழங்கப்பட்டன.

மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஆசிரியர் தினம் -2015